சூர்யா தயாரிப்பில் அருண்விஜய் மகன் நாயகனாகிறார்
தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார்.அவருடைய பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை அமரன் செய்கிறார் மற்றும் உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.
படம் குறித்து சரோவ் சண்முகம் கூறியதாவது…
குழந்தைகளை மையப்படுத்திய குடும்பப் படங்கள் ஹாலிவுட்டை ஒப்பிடும்போது நம் தமிழ் சினிமாவில் மிகவும் அரிதானவை. நடிகர் சூர்யா அவர்களின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் எப்போதும் அழகான, கருத்துள்ள குடும்பப் படங்களை உலகளவிலான இரசிகர்கள் க...









