வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

திரைப்படங்கள்

‘அயலி’ ஜீ5 இணையத் தொடர் வெற்றிக் கொண்டாட்டம் !

‘அயலி’ ஜீ5 இணையத் தொடர் வெற்றிக் கொண்டாட்டம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜீ5 தளத்தின் 'அயலி' இணையத் தொடர் வெற்றிக்கொண்டாட்டம் !! இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி” இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின் விருப்பத் தேர்வாக முன்னணியில் உள்ளது. இந்த வெற்றியினை படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர். Senior Vice President ZEE5 கௌசிக் நரசிம்மன் பேசியதாவது... "அயலி எங்களது தளத்தில் வெளியான மற்றுமொரு படைப்பல்ல, இது எங்கள் மனதிற்கு நெருக்கமான மறக்க முடியாத படைப்பு. ஜீ5 லிருந்து நாங்கள் இந்த தொடரைச் செய்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறோம...
யோகிபாபுக்கு கையெழுத்துடன் பரிசளித்த தல தோனி!

யோகிபாபுக்கு கையெழுத்துடன் பரிசளித்த தல தோனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பொம்மை நாயகி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married) படத்தில் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தோனி பயிற்சியில் பயன்படுத்திய பேட்டை யோகிபாபுவுக்கு பரிசாக அளித்துள்ளதாகவும், இதற்காக நன்றி தெரிவித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டு யோகிபாபு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/iYogiBabu/status/16258...
நேச்சுரல் ஸ்டார் நானியின்  “தசரா” திரைப்படத்திலிருந்து  இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியானது !

நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியானது !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நேச்சுரல் ஸ்டார் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிவருகிறது “தசரா” இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது சிங்கிள் தீக்காரி பாடல் வெளியாகியுள்ளது. மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தசரா படத்தின் இரண்டாவது சிங்கிளான தீக்காரி தூரம் ஆக்குறியாடி பாடல் ஒரு மென்சோக காதல் பாடலாக மனதை மயக்குகிறது. நாயகனின் காதல் வலியைச் சொல்லும் இப்பாடல் கேட்டவுடனே மனதிற்குள் ஒட்டிக்கொள்ளும், அழகான பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இப்பாடலில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ பாடல...
லவ் டுடே வெற்றிகரமாக 100வது நாளை கடந்தது!

லவ் டுடே வெற்றிகரமாக 100வது நாளை கடந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லவ் டுடே திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகியுள்ளது. சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் லவ் டுடே திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி லவ் டுடே 100வது நாள் என்பதால் இய...

கமல்ஹாசனை சந்தித்த கவின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கவின் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கவின் 'இன்று கோவிலுக்கு சென்...
வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்!

வைரலாகும் ‘விடுதலை’ பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன், தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'ஒன்னோட நடந்தா' பாடல் நேற்று காலை 11 மணிக்கு வெளியாகி கவனம் பெற்றது. சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் பாடியுள்ள இந்த பாடல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து இரண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. சுகா வரிகளில் தனுஷ், அநன்யா பட் பாடியுள்ள இந்த பாடல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து இரண்டு மில்லியன் ப...
நடிகர் அக்ஷய் குமாருக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!

நடிகர் அக்ஷய் குமாருக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் வருகிற மார்ச் மாதம் அக்ஷய்குமார் சில நடிகைகளுடன் வட அமெரிக்கா சென்று கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதனை விளம்பரப்படுத்த உலக உருண்டையின் இந்திய வரைபடத்தில் செருப்பு காலுடன் நிற்பதுபோன்று புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் வட அமெரிக்க ரசிகர்களை 100 சதவீதம் சந்தோஷப்படுத்த இருக்கிறோம், தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த புகைப்படத்துக்கு வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. "இப்படி காலில் செருப்பு போட்டுக்கொண்டு இந்திய வரைபடம் மீது நிற்பது நியாயமா? நமது நாட்டை கவுரப்படுத்துங்கள். அவமதிக்க வேண்டாம். நீங்...
அருள்நிதி பட இயக்குனருடன் இணைந்த அஷ்வின் குமார்!

அருள்நிதி பட இயக்குனருடன் இணைந்த அஷ்வின் குமார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருள்நிதி நடிப்பில் வெளியான 'தேஜாவு' திரைப்படத்தை இயக்கியவர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். தொடர்ந்து இவர் தெலுங்கில் நவீன் சந்திரா நடிப்பில் உருவான 'ரிபீட்' என்ற படத்தினை இயக்கியிருந்தார். இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து 'என்ன சொல்ல போகிறாய்' , 'செம்பி' ஆகிய படங்கள் மூலம் திரையுலகில் அறிமுகமான அஷ்வின் குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாகும் இப்படத்தினை ழென் ஸ்டூடியோஸ் (ZHEN Studios) சார்பில் புகழ் தயாரிக்கிறார். இந்நிறுவனத்துடன் ஆர்கா என்டர்டெயின்மெண்ட்ஸ் (ARKA ENTERTAINMENTS) நிறுவனம் இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'தேஜாவு' மற்றும் 'செம்பி' இந்...
மில்லியன் பார்வையாளர்களை கடந்த பத்துதல பாடல்!

மில்லியன் பார்வையாளர்களை கடந்த பத்துதல பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த பாடல் தற்போது ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை ...
‘வாத்தி’ டிரைலர் அப்டேட்!

‘வாத்தி’ டிரைலர் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'வாத்தி' திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.    ...