சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்!

திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்! எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது....
மோகன் ஜி படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்!

மோகன் ஜி படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மோகன் ஜி படத்தில் கதை நாயகனாக நடிக்கும் செல்வராகவன்! காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காண்பித்து வருகிறார். சாணிக் காயிதம் படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார். அடுத்ததாக திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கும் அடுத்த படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது....
பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா!

பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா! பல படங்களில் பிசியாக நடித்து வந்த அனுஷ்கா, தனது உடல் எடை கூடிய பின் திரைப்படங்களில் நடிக்காமல் எடையை கட்டுப்பாடாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வந்தார். தீவிரமான உடற்பயிற்சியை, தான் மட்டுமல்லாமல் தன்னுடைய திரையுலகத் தோழிகள் பலருடன் செய்து வந்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் தான், அனுஷ்காவின் கடைசி வெற்றிப் படம். இந்த நிலையில் மீண்டும் தமிழில் புதிய படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் அனுஷ்கா. ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திரு மகள், தாண்டவம் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுஷ்கா. நீண்ட இடைவெளிக்குப் பின், மீண்டும் விஜய் இயக்கத்தில் கமர்ஷியல் கதையில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது....
மருத்துவமனையில் கமல்… விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்!

மருத்துவமனையில் கமல்… விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
மருத்துவமனையில் கமல்... விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்! கமல்ஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பிலும், பிக்பாஸ் படப்பிடிப்பிலும் மாறி மாறி பங்கேற்று வந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் படப்பிடிப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் விக்ரம் பட வேலைகள் தாமதமாகி உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் சார்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்தபடியே கமல்ஹாசன் பேசிய காட்சிகளை திரையில் ஒளிபரப்பினர். அதில், ‘‘கொரோனா தடுப்பூசி போட்டதால் எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா அச்சம் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார். விக்ரம் படத்தில் கமல்ஹாசனும், வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதியும் நடிக்கும் சண்டை காட்சியை படமாக்க பொள்ளாச்சியில் அரங்கு...
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா!

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ரிது வர்மா! தெலுங்கு சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் பெல்லி சூப்புலு படத்தில் நடித்த பிறகு பல இயக்குநர்களின் கதைகளுக்கு ஒரு நாயகியாகவே மாறிப்போனார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்தார். அவருடைய இயல்பான நடிப்பும் சின்சியாரிடியும் ரிது வர்மாவுக்குத் தமிழில் அதிக படங்களைக் கொண்டு வந்து சேர்க்க ஆரம்பித்திருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் கணம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
வாலி படத்தின் இந்தி ரீமேக்… எஸ்.ஜே.சூர்யா வழக்கு!

வாலி படத்தின் இந்தி ரீமேக்… எஸ்.ஜே.சூர்யா வழக்கு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வாலி படத்தின் இந்தி ரீமேக்... எஸ்.ஜே.சூர்யா வழக்கு! எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வாலி. இதில் அஜித் கதாநாயகனாகவும் வில்லனாகவும் இரு வேடங்களில் நடித்து இருந்தார். அவருக்கு திருப்பு முனை படமாக வாலி அமைந்தது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருப்பதாகவும் ரீமேக் பணிகளை அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. வாலி இந்தி ரீமேக்கில் அஜித்குமார் நடிக்காத பட்சத்தில் தானே நடிக்க எஸ்.ஜே.சூர்யா விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும், ரீமேக் உரிமை திரைக்கதை எழுதியவருக்கே உண்டு என்ற சமீபத்திய ஆரண்ய காண்டம் பட வழக்கில...
படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்!

படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்! ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன. மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர். அப்போது அவருக்கு எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது‌. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்....
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்....
அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்!

அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அம்மன் வேடத்தில் தமன்னா.... வைரலாகும் புகைப்படம்! நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்த பக்தி படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயகிகள் பலர் அம்மனாக நடித்து இருக்கிறார்கள். கடந்த வருடம் வெளியான மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது அம்மன் வேடமிட்டு தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘‘வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை கடவுளாக உணர்கிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். தமன்னாவின் அம்மன் வேட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் உங்களுக்கு அம்மன் வேடம் கச்சிதமாக உள்ளது. புதிய படத்தில் அம்மனாக நட...
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!

விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்! தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....