அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்!
அடுத்தடுத்து 3 புதிய படங்களில் நடிக்கும் அஜித்!
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. வெளிநாட்டில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. கொரோனா 2-வது அலை பரவலால் அந்த காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே, அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் வினோத் இயக்குவதாகவும் போனிகபூர் தயாரிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. 61-வது படத்துக்கான திரைக்கதையை வினோத் தயார் செய்து அஜித்திடம் சொன்னதாகவும் அவருக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் நடிக்க உள்ள மேலும் 2 படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் ஒரு படத்தை சூர்யாவின் சூரரை போற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்குவதாகவும் இன்னொரு படத...









