ஊர்வசி – ஜோஜு ஜார்ஜ் – ஐஸ்வர்யா லட்சுமி இணையும் “ஆஷா”
*ஊர்வசி – ஜோஜு ஜார்ஜ் இணைந்து நடிக்க, ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் – “ஆஷா” திரைப்படம், இன்று பூஜையுடன், படப்பிடிப்பு துவக்கம்!*
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படமான “ஆஷா” படத்தின் பூஜை, திருகக்கரையில் உள்ள வாமன மூர்த்தி கோவிலில் இன்று விமரிசையாக நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து, படக்குழு இன்று படப்பிடிப்பை துவங்கியுள்ளது.
இந்த விழாவில், ஜோஜு ஜார்ஜ் உடன் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் மற்றும் இயக்குநர் சஃபர் சனல் விளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து படத்தின் ஜோஜு ஜார்ஜ் கிளாப் அடிக்க, மது நீலகண்டன் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.
இப்படத்தில் ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, விஜயராகவன், ஐஸ்வர்யா லட்சுமி, மற்றும் “பனி”...









