சனிக்கிழமை, அக்டோபர் 10
Shadow

நடிகர்கள்

வில்லனாக களமிறங்கும் மனோஜ் பாரதிராஜா

வில்லனாக களமிறங்கும் மனோஜ் பாரதிராஜா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான தலைப்புகளுடன் புதுப்படங்கள் வந்த வண்ணமாக உள்ளன. அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் உருவாகி வரும் திரில்லர் படம் தான் `ரெடி டு சூட்'. எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் இந்த படத்தின் படத்தின் பூஜை, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மனோஜ்குமார் இதயராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் ஆனந்த் நாக் நாயகனாக நடிக்கிறார். இவர் நேரம், பிரேமம், வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஆனந்த் நாக் ஜோடியாக ஜீவிதாவும், வில்லனாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் கே.பாரதிராஜாவும் நடிக்கின்றனர். சதீஷ் கதிர்வேல் ஔிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவ...
மகன் கவுதமுக்கு அப்பாவாகவே Mr.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ள கார்த்திக்..!

மகன் கவுதமுக்கு அப்பாவாகவே Mr.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ள கார்த்திக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று புகழப்பட்ட கார்த்திக் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து மகன் கவுதமுக்கு அப்பாவாகவே மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நடித்துள்ளார். அவரிடம் பேசியதில் இருந்து... நான் கவுதமை வைத்து படம் இயக்குவதற்காக கதை எழுதிக் கொண்டிருந்தேன். அந்த கதை அவருக்கு தெரியாது. ஒருநாள் என்னிடம் வந்து ஒரு கதை கேட்கறீங்களா? என்று கேட்டார். சம்மதித்தேன். திருவை அறிமுகம் செய்துவிட்டு சென்றுவிட்டார். கதை மிகவும் பிடித்ததால் சம்மதித்தேன். நானும் அப்பாவும் சேர்ந்து நடித்ததில்லை. நான் நடிக்க தொடங்கும்போதே அப்பா மறைந்துவிட்டார். அந்த ஏக்கம் எனக்குள் இருந்தது. தனிமையாகவே என்னுடைய சினிமா வாழ்க்கை வேகமாக ஓடியது. அதை சரி செய்ய என்னுடன் நடிக்கும் மூத்த நடிகர்களுடன் மனம் விட்டு பேசுவேன். இப்போது கவுதமிடம் பேசி அவர்கள் உலகத்தை புரிந்துகொள்கிறேன். நிஜ வாழ்க்கையில் நாங்கள் எப்படியோ அப்படித்தான் படத்...
என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் – கமல்ஹாசன்

என் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வரவேற்பேன் – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்  ...
ஜுலை15ல் உலக MGR பேரவை நடத்தும் பிரமாண்டமான எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா..!

ஜுலை15ல் உலக MGR பேரவை நடத்தும் பிரமாண்டமான எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  உலக எம்.ஜி.ஆர் பேரவை பிரதிநிதிகள் இணைந்து நடத்தும் மாநாடு மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ஆம் தேதி சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. அதனை பற்றிய தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் உலக எம்ஜிஆர் பேரவை முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பற்றி பேசினர். எம்ஜிஆர் பக்தர்கள் உலகம் முழுவதும் பரவி, அங்கேயே அமைப்பை தொடங்கி விழா நடத்தி வருகிறார்கள். நானும் ஃபிரான்ஸில் ஒரு அமைப்பை தொடங்கி 15 வருடங்களாக நடத்தி வருகிறேன்.  கடந்த ஆண்டு ஃபிரான்ஸில் மாநாடு நடத்தினோம். அதில் சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரிடம் புரட்சி தலைவரின் பக்தர்களை ஓரணியில் இணைப்பது பற்றி நிறைய பேர் வேண்டுகோள் வைத்தனர். அதற்கு செவி சாய்த்து துவங்கப்பட்டது தான்...

அரை நூற்றாண்டுகளாக தமிழகம் கறைபட்டுள்ளது – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  மக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள்  வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும் 6 பாடல்கள் கொண்ட தொகுப்பை  “மக்கள் நீதி மய்யம்” கட்சியின் தலைவர் பத்மபூஷன் கமல்ஹாசன் வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வரிசையில் “மக்கள் நீதி மய்யம்”இணைந்த பிறகு நடைபெற்ற முதல் கட்சி நிகழ்ச்சியாக அமைந்த இந்த விழாவில், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றிய கமல்ஹாசன், "நம்மவர் என்பது உங்களையும், என்னையும் குறிக்கும். வரும் காலங்களில் மாலைகளையும், பொன்னாடைகளையும் நாம் தவிர்க்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்கிறோம் என்பதற்கான சமிக்ஞையாக அது இருக்கும். வருகிற வழியில் சில பேனர்களைப் பார்த்தேன். நமது சாலைகளில் ப...
கவுதம் கார்த்திக்கை கலாய்த்த சதீஷ்..!

கவுதம் கார்த்திக்கை கலாய்த்த சதீஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் மிஸ்டர்.சந்திரமௌலி படம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கவுதம் ஜோடியாக ரெஜினாவும், முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சதீஷ் நடித்துள்ளனர். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சதீஷ் பேசியதாவது, `திரு பேசும் கவுதம் கார்த்திக் இதுவரை நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொன்னார். ஆனால் முந்தைய படங்களில் எல்லாம் கவுதம் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரஹர மஹாதேவகி என அவர் ரியாலாகவே நடித்திருந்தார். கவுதமுக்கு இது எல்லாம் ஈசி. ஆனால் இந்த படத்தில் உண்மையாகவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். பாக்ஸிங்குக்காக உடற்பயிற்சி செய்து கடுமையாக உழைத்திருக்கிறார். ...
நாகேஷ் பேரன் நடிக்கும் ஸ்கூல் கேம்பஸ்

நாகேஷ் பேரன் நடிக்கும் ஸ்கூல் கேம்பஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    DR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் " AMN குளோபல் குரூப் குழுவானது, AMN FINE ARTS  என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி "ஸ்கூல் கேம்பஸ்" என்ற திரைப்படத்தினை தயாரித்து வருகிறது. ஏ.எம்.என் குளோபல் குரூப் மேனேஜிங் டைரக்டர் DR . R .J ராமநாராயணா இந்த படத்தினை இயக்கி , தயாரிப்பது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். இந்த படத்தின் முதல் நாள்  படப்பிடிப்பு  ஸ்ரீ சந்தோஷ் குமார் மால் IAS (மாவட்ட ஆட்சியர் )அவர்களால் டெல்லி கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. இந்தியக் கல்வியின் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சொல்லும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரனும், சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த் பாபு   அவர்களின் மகனான  கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கிறார். ...
ஆந்திராமெஸ் மூலம் புதுவில்லன் ஆக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் ஓவியர் ஸ்ரீதர்..!

ஆந்திராமெஸ் மூலம் புதுவில்லன் ஆக தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் ஓவியர் ஸ்ரீதர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
என் படத்தை எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக்கொள்வேன். - ஜெய் அதிரடி நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது என்று கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆந்திரா மெஸ் பட இயக்குநர் ஜெய். சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில்  கதை சொல்லப்பட்டிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”. நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய். “ஷோ போட் ஸ்டுடியோஸ்” சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “ரிச்சி” போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி,...
28ம் தேதி வெளியாகும் தனுஷின்  வடசென்னை டிரைலர்..!

28ம் தேதி வெளியாகும் தனுஷின் வடசென்னை டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தனுஷ் நடித்துள்ள " வட சென்னை " படத்தின்  ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் 'வட சென்னை'. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது. சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.தனுஷ்- வெற்றிமாறன்   இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்கள...
சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது எது..? விஜய்சேதுபதி சொன்ன ரகசியம்

சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது எது..? விஜய்சேதுபதி சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று ஜுங்கா படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது நடிகரும், தயாரிப்பாளருமான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் ரத்னம், நந்தகோபால், கதிரேசன், டி. சிவா, காரகட்ட பிரசாத், சி வி குமார், கருணாமூர்த்தி, இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறிவழகன், சாய் ரமணி,பிரேம், பாலாஜி தரணிதரன், ஜனநாதன், விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்ரமணியன், அருள்பதி, நடிகர்கள் நாசர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுடன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகை சயீஷா, நடிகை சர...