சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

நடிகைகள்

கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!

கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்! தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் பிரியா பவானி சங்கர், தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை, கிண்டலடித்து பதிவிட்டு வந்தனர். இதற்கு நடிகை பிரியா பவானி சங்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். நெட்டிசன் ஒருவர், “மேடம் நீங்களும் திருட்டு திராவிட சொம்பு தான” எனக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர், “பெரிய சிஐடி... ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் டைம்லைன்ல இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் பத்திரிக்கை துறைல இருந்திருக்கேன். என் வேலையே அதுதான். இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” எனக் குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர், “மேடம் இன்னும் 5 வருஷத்துல சன...
நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் நடிப்பில் தற்போது தலைவி படம் உருவாகி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை கங்கனா, ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா, அரசியல் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். சில சமயங்களில் அதன்மூலம், அவர் சர்ச்சையில் சிக்குவதும் உண்டு, அந்தவகையில், தற்போது மேற்குவங்க தேர்தல் மற்றும் அம்மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துகள், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது....
மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்!

மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம்! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். தொடர்ந்து அஜித்தின் ஏகன், வெங்கட்பிரபு இயக்கிய கோவா, கே.வி.ஆனந்தின் கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு இன்று காலை முதலே டுவிட்டர் மூலம் உதவிகேட்டு வந்தார் பியா. “உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் நகரில் தனது சகோதரர் இருப்பதாகவும், உடனடியாக படுக்கையும், வென்டிலேட்டர் வசதியும் அவருக்குத் தேவை, தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டிருந்தார். ஆனால், நடிகை பியாவின் சகோதரருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை போலிருக்கிறது. சிறிது நேரத்தில் “எனது சகோதரர் இறந்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார் பியா. அவருக்கு...
பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை! பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. இப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதுதவிர கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சலார் படப்பிடிப்பு, மீண்டும் தொடங்கும்போது பிரபாசுடன் ஸ்ரீநிதி நடன...
கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்… வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா!

கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்… வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா! தமிழில் கேடி படத்தில் அறிமுகமான இலியானா விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபோனும் காதலித்தனர். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை இலியானா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தார். ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் கிசுகிசுத்தனர். ஆனால் சமீபத்தில் இலியானாவுக்கும், காதலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இலியானா கர்ப்பமாக இருந்தார் என்றும், கருக்கலைப்பு செய்தார் என்றும், காதல் தோல்வி மன உளைச்சலில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு...
அசுரன் பட நடிகைக்கு கொரோனா!

அசுரன் பட நடிகைக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
அசுரன் பட நடிகைக்கு கொரோனா! தமிழில் விஜய்யின் பைரவா படத்தில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. தொடர்ந்து கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுசுடன் அசுரன் மற்றும் என் ஆளோட செருப்ப காணோம், துப்பாக்கி முனை ஆகிய படங்களில் நடித்துள்ளார். கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அம்மு அபிராமி தற்போது கொரோனா தொற்றில் சிக்கி உள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான மருந்துகளும் எடுத்து வருகிறேன். முன்பை விட வலிமையாக திரும்பி வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று கூறி...
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக குஷ்பு தோல்வி!

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக குஷ்பு தோல்வி!

HOME SLIDER, NEWS, politics, நடிகைகள்
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் பாஜக குஷ்பு தோல்வி! தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு, திமுக சார்பில் டாக்டர் எழிலன்,  அமமுக சார்பில் வைத்தியநாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷெரீன் ஆகியோர் போட்டியிட்டனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் கே.எம்.ஷரீப், மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் போட்டியிட்டார் இறுதி சுற்று முடிவில் டாக்டர் எழிலன் 33044  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் 71537 வாக்குகளும், குஷ்பு 38493 வாக்குகளும் பெற்றுள்ளனர். சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் எழிலன் பாஜக வேட்பாளர் குஷ்புவை விட 33,044 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்...
விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை! விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சக்ரா. அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கிய இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளார் விஷால். அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். இதில் அவருடன் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்த அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இந்தப் படத்தை இயக்குகிறார். அடங்க மறு போலவே ஆக்ஷன் அதிரடியுடன் இந்தப் படம் உருவாக உள்ளது....
வயது குறைவானவரை திருமணம் செய்யும் அனுஷ்கா!

வயது குறைவானவரை திருமணம் செய்யும் அனுஷ்கா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
வயது குறைவானவரை திருமணம் செய்யும் அனுஷ்கா! ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன. பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. பின்னர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் இணைத்து பேசினர். இறுதியாக மனைவியை விவாகரத்து செய்த 44 வயது தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடியை அனுஷ்கா காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் பேசப்பட்டது. இவற்றையெல்லாம் அனுஷ்கா மறுத்தார். சமீபத்தில் அனுஷ்காவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோ...
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்!

சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்! தமிழில் சூது கவ்வும் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமாகும் அழகிய கண்ணே படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சீனு ராமசாமியின் துணை இயக்குனர் விஜயகுமார் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள கோணப்பட்டி கிராமத்தில் நடந்து வருகிறது. இதில் கிராமத்து மக்களும் கலந்து கொள்ள 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு படப்பிடிப்பு நடந்தது. மேலும் கிராம மக்கள் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க கூடியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொரோனா தடுப்பு குழுவினர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர். குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றாததால் படப்பிடிப்பு குழுவினருக்கு தடுப்பு பிரிவினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேற்க...