ஸ்ரீதேவி உடல் தனி விமானம் மூலம் இன்று இரவு மும்பை வர வாய்ப்பு உள்ளது
கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் நடந்த கணவர் போனிகபூரின் மைத்துனர் மோகித் மார்வா திருமணத்தில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சி முடிந்ததும் இரவு தான் தங்கி இருந்த எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலுக்கு சென்று தங்கினார். அவருடன் கணவர் போனிகபூர், மகள் குஷி ஆகியோரும் தங்கி இருந்தனர்.
அப்போது குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் கணவர் போனிகபூர் கதவை தட்டினார். ஆனால் கதவை திறக்காததால் பதட்டம் அடைந்த போனிகபூர் ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.
உள்ளே ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் சுயநினைவின்றி மூழ்கி கிடந்தார். இதைப் பார்த்து கதறித்துடித்த அவர் போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து ஸ்ரீதேவியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
துபாய் நாட்டின் கடுமையா...









