புதன்கிழமை, ஜூன் 10
Shadow

நடிகைகள்

கார் விபத்து டிராமா போடும் குஷ்பு எதிர்காலம் தேறுமா?  –  வம்புக்கு இழுக்கும் மீராமிதுன்

கார் விபத்து டிராமா போடும் குஷ்பு எதிர்காலம் தேறுமா?  – வம்புக்கு இழுக்கும் மீராமிதுன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
கார் விபத்து டிராமா போடும் குஷ்பு எதிர்காலம் தேறுமா? நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். சில தினங்களுக்கு முன்பு வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரது காரில் டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் குஷ்பு அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்த நிலையில் குஷ்புவின் அரசியல் நடவடிக்கைகளை நடிகை மீராமிதுன் விமர்சித்து உள்ளார். டுவிட்டரில் மீரா மிதுன் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ சீட்டுக்கு தி.மு.க கட்சியில் சேர்ந்து 10 வருடம் தி.மு.க ஆட்சிக்கே வர முடியவில்லை. எம்.பி. சீட்டுக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 10 வருடம் காங்கிரஸ் ஆட்சிக்கே வரமுடியவில்லை. இப்போது பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறீர்களே மேடம் குஷ்பு. கார் விபத்து டிராமா. எதிர்காலம் தேறுமா? கோலிவுட் மாபியாக்களால்தான் குஷ்பு பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். திட்டம் என்ன குஷ்பு?” என்று குறிப்பிட்டு உ...
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்த்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்த்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த். தமிழில் கடந்த ஆண்டு பிரியா ஆனந்த் நடித்திருந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. திரைப்படங்கள் மட்டுமல்லாது தற்போது இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார் பிரியா ஆனந்த். ‘சிம்பிள் மர்டர்’ என்ற டைட்டிலில் பிளாக் காமெடி வெப் சீரிஸாக உருவாகியுள்ள இத்தொடரின் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியா ஆனந்த். அதில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது....
விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன்!

விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய ஸ்ருதி ஹாசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  படப்பிடிப்பில் இருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் எஸ்.பி. ஜெகநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லாபம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பு நடைபெறுவதால், விஜய் சேதுபதி ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வருகை தருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லாபம் படப்பிடிப்பு தளத்தில் தன்னை காண வந்த ரசிகர்களை விஜய் சேதுபதி கட்டிப்பிடித்து தனது வழக்கமான பாணியில் முத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகின்றது. இந்த தகவலை அறிந்த ஸ்ருத...
எழில் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்த பார்த்திபன்!

எழில் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்த பார்த்திபன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “புரடக்‌ஷன் நம்பர் 2” கோலாகல துவக்கம் ! பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சம் வைக்காத, வெற்றியை சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S. எழில் இயக்கத்தில் இரு தலைமுறைகளை சேர்ந்த மிக முக்கிய நடிகர்களான பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள். தற்போதைய நிலையில் “புரடக்‌ஷன் நம்பர் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் D. விஜய்குமரன் தயாரிக்கிறார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, இயக்குநர் S.எழில், வசனகர்த்தா C.முருகேஷ் பாபு மற்றும் ஒளிப்பதிவாளர் குருதேவ் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் நவம்பர் 19, 2020 அன்று இப்படம் துவங்கப்பட்டது. படம் ...
நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில் ! நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது... படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற, தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யு...
‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

‘சூரரைப் போற்று’ படத்தில் வந்த பெண் பைலட் ரீல் இல்ல ரியல் பைலட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தில் இறுதி காட்சியில் வரும் பெண் பைலட் நிஜத்திலும் பைலட் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் தீபாவளி விருந்தாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நெடுமாறானாக சூர்யா, பொம்மியாக அபர்ணா பாலமுரளி என்று நடித்த அனைவரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். ஒரு காட்சிக்கு வந்தாலும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் க்ளைமேக்ஸ் காட்சியில் வந்த பெண் பைலட் ஒருவர். இவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பைலட் தான். இவர் பெயர் வர்ஷா. இண்டிகோ விமானத்தில் பைலட்டாக இவர் உள்ளார். சென்னையில் வசித்து வரும் இவரது கணவர் லோகேஷ் என்பவரும் பைலட் தான். இவரது பூர்விகம் கேரளா. சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கேட்டுக் கொண்டதற்காக சிறப்பு ...
என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?!

என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ
என்னதான் நயன் படமானாலும் விக்னேஷ் சிவன் இப்படியா செய்வது?! https://youtu.be/2XXptfI4VIo
தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா

தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சாயிஷா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை சாயிஷா தெலுங்கில்  பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக  நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை சாயிஷா  வனமகன் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .அதனையடுத்து தமிழ், தெலுங்கு,, கன்னடம்  ஆகிய மொழிகளில்  ஒரு சில படங்களில் நடித்த இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் நடித்து வரும் சாயிஷா தற்போது ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தில் நடித்து முடித்துள்ளார் . அதனையடுத்து  தெலுங்கு, கன்னடத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சாயிஷா தெலுங்கில் 60 வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் நாயகியாக நடிக்க சாயிஷா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .போயப்படி சீனு இயக்கும் இந்த படத்தினை  துவாராகா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.சமீபத்தில்  இந்த படத்தின் படப்ப...
விஜய்மில்டன் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி!

விஜய்மில்டன் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான அஞ்சலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கோலி சோடா' மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார். இப்படத்தில் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தைத் தமிழில் 'கோலிசோடா', 'கடுகு' போன்ற படங்களைத்  தயாரித்த ரஃப்நோட் நிறுவனம்,  கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார்....
லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

லாரி மோதிய விபத்து “கடவுள் முருகன்” காப்பாற்றினாராம் சொல்கிறார் குஷ்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  வேல் யாத்திரைக்கு புறப்பட்ட குஷ்புவின் கார் மீது கண்டய்னர் லாரி பயங்கரமாக மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக குஷ்புவுக்கு காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். மேல்மருவத்தூர் அருகே நடந்த இந்த விபத்தில் குஷ்புவின் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சிக்கிய பின்னரும் வேல் யாத்திரைக்கு கடலூர் சென்றார் குஷ்பு. முன்னதாக "என் கணவர் வழிபடும் கடவுள் முருகன் தான் விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றினார்" என டிவீட் போட்டிருக்கிறார் குஷ்பு. அரசியலுக்காக இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ....