புதன்கிழமை, ஜூன் 10
Shadow

நடிகைகள்

ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்கிறார் மூக்குத்தி அம்மன் நயன்தாரா!

ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்கிறார் மூக்குத்தி அம்மன் நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் அதற்குப் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன் ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஸ்நீக்பிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கடவுள் பெயரால் பொது மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் மனோபாலாவை நயன்தாரா மிரட்டுவது போன்ற ஒரு காட்சி உள்ளது ஜீசஸ் பெயரால் மோசடி செய்வது அவருக்கு பிடிக்காது என்றும், ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்றும், நரகத்திற்கு உன்னை கொண்டு சென்று எண்ணெயில் போட்டு பொரித்து வ...
கதை திருட்டு பிரச்சனையால் பொங்கலுக்கு தள்ளிப்போன பூமி ரிலீஸ்

கதை திருட்டு பிரச்சனையால் பொங்கலுக்கு தள்ளிப்போன பூமி ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கதை திருட்டு பிரச்சனையால் தள்ளிப்போன பூமி ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ திரைப்படம் தீபாவளியை ஒடிடி யில் ரிலீஸாக இருந்தது. ஆமால் திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதை அடுத்து இதுகுறித்து பாக்யராஜ் தலைமையிலான குழு அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என அறிவித்து உதவி இயக்குனருக்கு கடிதம் கொடுத்தது. இந்நிலையில் இது சம்மந்தமான பஞ்சாயத்து இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் இப்போது பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது...
வெப்தொடரில் நடிக்க வந்த சானியா மிர்சா

வெப்தொடரில் நடிக்க வந்த சானியா மிர்சா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு தொடர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தொடரில் அவரே தனது கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெப்தொடரில் நடிக்க சானியா மிர்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த தொடரில் நடிக்க சானியா மிர்சா சம்பளமே வாங்காமல் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது இது குறித்து சானியா மிர்சா கூறியபோது ’இந்தியாவில் தீராத நோய்களில் ஒன்றாக இருக்கும் காச நோய் குறித்த விழிப்புணர்வு குறித்த வெப்தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக உள்ளனர் இந்த நோய் குறித்த தவறான கருத்துக்களை மாற்றுவது தான் எனது நோக்கம் இந்த தொடரால் மக்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வை வேண்டும்...
சூரரைப் போற்று சாதனையா வேதனையா – கோடங்கி விமர்சனம்

சூரரைப் போற்று சாதனையா வேதனையா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  எப்பவும் உண்மை சம்பவங்களுக்கு பலம் அதிகமா இருக்கும் வலி அதிகமா இருக்கும்னு சொல்லுவாங்க... அது சரிதான்னு நிரூபிச்ச படம்தான் சூர்யாவின் சூரரைப் போற்று. வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த விமான பயணத்தை சாமானியனும் அனுபவிக்க முடியும் என போராடி வெற்றி பெற்றவர் கேப்டன் கோபிநாத். இவர் தொடங்கிய ஏர் டெக்கான் விமான நிறுவனம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அவரின் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை அவர் பட்ட கஷ்டங்களை மிக யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். சூர்யாவின் நடிப்பைவிட அபர்ணா பாலமுரளி அத்தனை அம்சம். நெருக்கமான காட்சிகளில்... பிரமாதம் போங்க... எங்கம்மா இருந்த... நல்ல இயக்குனர்கள் படங்களில் இனி அடிக்கடி அபர்ணா பாலமுரளியை பார்க்க முடியும். சூர்யாவுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஸ்கிரிப்... சரியாக பயன்படுத்தி இருக்கிறார். தோல்வியும் ஏமாற்றமும் ஏற்படும் போது மொட...
சூரரைப் போற்று பட கோடங்கி விமர்சனம்

சூரரைப் போற்று பட கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
  சூரரைப் போற்று பட கோடங்கி விமர்சனம் https://youtu.be/V3q9i_gXlAo
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை உளறிய சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து நான்காவது சீசனையும் அவர் தான் தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் ஒயில்ட் டாக் படப்படிப்பில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் நாகர்ஜுனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். நாகர்ஜுனா இல்லாத நேரத்தில் அவரின் மருமகளான சமந்தா பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரம் தொகுத்து வழங்கினார். ஒயில்ட் டாக் ஷூட்டிங் இன்னும் முடியாததால் இந்த வாரமும், அடுத்த வாரமும் சமந்தா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார் சமந்தா. மேலும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை க...
பாடகர் வேல்முருகன் வெளியேற  பாடகி ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி!

பாடகர் வேல்முருகன் வெளியேற பாடகி ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் 25 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 17-வதாக வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார் அர்ச்சனா. அதைத்தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் நபராக வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா. இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் பாடகர் வேல்முருகன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்று 18-வது போட்டியாளராக 'சுசிலீக்ஸ்' சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதற்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கடந்...
சூரரைப் போற்று குறித்து மனம் திறந்த சூர்யா!

சூரரைப் போற்று குறித்து மனம் திறந்த சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *சூரரைப் போற்று' குறித்து மனம் திறக்கும் சூர்யா* ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது 'சூரரைப் போற்று' திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக 'சூரரைப் போற்று' படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது பின்வருமாறு: 'சூரரைப் போற்று' படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து.. சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். 'நந்தா...
திடீர் உடல்நலக்குறைவு – ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள்!

திடீர் உடல்நலக்குறைவு – ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  திடீர் உடல்நலக்குறைவு - ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். கடந்த வாரம் அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டதால் அவருக்கு பதில் சமந்தா தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் 4 நிகழ்ச்சி ஆரம்பித்து 53 நாட்கள் ஆன நிலையில் நேற்று போட்டியாளர்களில் ஒருவரான நோயல் சீன் பாதியில் வெளியேறினார். அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். பரிசோதனையின் முடிவில் அவர் மேல் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்ததையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறினார். இதற்கு முன்னர் கங்கவா என்ற போட்ட...
மேக்னா ராஜ் குழந்தையின் செல்லப்பெயர்?

மேக்னா ராஜ் குழந்தையின் செல்லப்பெயர்?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். மறைந்த கணவனே குழந்தையாக பிறப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த மேக்னா ராஜுக்கு கடந்த 22-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது இந்நிலையில், அந்த குழந்தையை ‘சிண்டு’ என்ற செல்லப் பெயரால் அவரது குடும்பத்தினர் அழைத்து வருகிறார்களாம். கவலைகளை மறக்க செய்பவன் என்பதால் இந்த பெயரை செல்லமாக வைத்துள்ளதாக மேக்னாராஜின் தந்தை தெரிவித்துள்ளார். விரைவில் மேக்னா ராஜ் குழந்தையின் பெயர் சூட்டு விழா நடைபெறும் என்றும், அதனை பிரம்மாண்டமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது...