சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

நடிகைகள்

ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்… குவியும் லைக்குகள்!

ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்… குவியும் லைக்குகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ஸ்ருதி ஹாசனின் மாஸ்க் ஸ்டைல்... குவியும் லைக்குகள்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிப்பு, இசையைத் தவிர சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படும் நடிகை ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தில் ஒரு ஸ்டைலான மாஸ்க்கை நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்துள்ளார். அந்தப் புகைப்படத்தின் கேப்ஷனாக தமிழ் பொண்ணு அணிந்து இருக்கும் மாஸ்க் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறார்கள்....
‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் கெத்தாக வலம்வந்த விஷால் பட நடிகை – வைரலாகும் வீடியோ

‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் கெத்தாக வலம்வந்த விஷால் பட நடிகை – வைரலாகும் வீடியோ

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் கெத்தாக வலம்வந்த விஷால் பட நடிகை - வைரலாகும் வீடியோ! நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சிவப்பதிகாரம்’. கரு பழனியப்பன் இயக்கிய இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை மம்தா மோகன்தாஸ். இதையடுத்து மலையாளத்தில் பிசியான அவர், தற்போது 15 ஆண்டுகளுக்கு பின் விஷாலுடன் மீண்டும் இணைந்து எனிமி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பஹ்ரைன் சென்றுள்ள நடிகை மம்தா, அங்குள்ள வீதிகளில் ‘ஹார்லி டேவிட்சன்’ பைக் ஓட்டிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: “நமக்கே பைக் ஓட்ட தெரியும்போது ஏன் மற்றவருக்காக நாம் காத்திருக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு பின் பைக் ஓட்டி இருக்கிறேன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், எனக்கு இன்னும் அந்த டச் விட்டுப்போகவில்லை” என ப...
கர்ணன் பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு… சூர்யா படத்தில் நடிக்கிறார்!

கர்ணன் பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு… சூர்யா படத்தில் நடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கர்ணன் பட நடிகைக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு... சூர்யா படத்தில் நடிக்கிறார்! மலையாள நடிகையான ரஜிஷா விஜயன், தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கர்ணன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன், அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில், நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தான் ரஜிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். ஆனால் அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இரு...
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்!

ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்! நடிகை ரைசா வில்சன் கடந்த வாரம் தன்னுடைய சமூக வலைதளங்களில் முகம் வீங்கி இருப்பது போன்ற ஒரு படத்தை பதிவு செய்து மருத்துவர் பைரவி செந்திலிடம் எடுக்கப்பட்ட சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் பைரவி செந்தில், ரைசா மூன்று நாட்களில் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது மானநஷ்ட வழக்கை சந்திக்க நேரிடும் என்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு மற்றொரு நோட்டீஸ் மூலம் பதில் அளித்திருந்த ரைஸா, தனது முகத்திற்கு பைரவியின் சிகிச்சையால் தான் இப்படி ஆனது என்றும் அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது மருத்துவர் பைரவி செந்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ’ரைசா இ...
கொரோனா பாதிப்பு எதிரொலி…. விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு!

கொரோனா பாதிப்பு எதிரொலி…. விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கொரோனா பாதிப்பு எதிரொலி.... விஜய் சேதுபதியின் பாலிவுட் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு! இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பும் நடிக்க ஒப்பந்தமாகினார். இப்படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் 15-ந் தேதி தொடங்க திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் நடிகை கத்ரீனா கைப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால், படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்ட போதிலும், நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருவதால், படப்பிடிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளனர். இதுதவிர நடிகர் விஜய் சேதுபதி காந்தி டாக்கீஸ், மும்பைகார் போன...
கொரோனா தொற்று அறிகுறி… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா!

கொரோனா தொற்று அறிகுறி… தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கொரோனா தொற்று அறிகுறி... தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை நந்திதா! நடிகை நந்திதா, பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றார். தற்போது ‘ஐ.பி.சி. 376’, ‘வணங்காமுடி’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக நடிகை நந்திதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதையடுத்து என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக கொரோனாவில் சிக்குவது திரையுலகிலும்,...
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில், அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....
தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜிஷா விஜயன்!

தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜிஷா விஜயன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தனுஷை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ரஜிஷா விஜயன்! மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் மற்றொரு நாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்....
பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா!

பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
‘தளபதி 65’ பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா! மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் தேர்தல் முடிந்ததும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா சென்று இருந்தார். விஜய், பூஜா ஹெக்டேவின் காதல் மற்றும் டூயட் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். இந்தநிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து பூஜா ஹெக்டே டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனக்கு கொரோனா தொற்று உற...