ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

நடிகைகள்

கவர்ச்சி உடையில் கலக்கும் ராய் லட்சுமி!

கவர்ச்சி உடையில் கலக்கும் ராய் லட்சுமி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது....
சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘யசோதா’, ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் முன்னணி இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்க, சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். இப்படத்தில், மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நீலிமா குணா, மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பா...
என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம் – ஹூமா குரோஷி!

என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம் – ஹூமா குரோஷி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நாளை (24.02.2022) வெளிவர இருக்கும் திரைப்படம் 'வலிமை'. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்ததை குறித்து நடிகை ஹூமா குரேஷி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது, “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பான ஒரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர...
பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார்!

பிரபல மலையாள நடிகை லலிதா காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான காதலுக்கு மரியாதை என்ற படத்தில் ஷாலினிக்கு அம்மாவாக நடித்தவர் நடிகை கேபிஏசி லலிதா (74). இவர் ஏராளமான மலையாள படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகை லலிதா உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலையாளம் மற்றும் தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை லலிதாவின் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய ஷகிலா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ், மலையாளம், தெலுங்கில் 1980 மற்றும் 90-களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. கேரளாவில் இவரது படங்கள் வசூலில் முன்னணி நடிகர்கள் படங்களை முறியடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இவருக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமா படமாகவும் வந்துள்ளது. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இந்த நிலையில் ஷகிலாவை திருப்பத்தூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அழைத்து இருந்தனர். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். விழா முடிந்து வெளியே வந்த ஷகிலாவை பார்த்ததும் அவரோடு செல்பி எடுக்கவும், கைகுலுக்கவும் ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் ஷகிலா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவர்களிடம் இருந்து ஷகிலாவை பாதுகாவலர்கள் கஷ்டப்பட்ட...
உங்கள் ஆதரவோடு கொஞ்சம் கொஞ்சமாக நடிகனாக மாறி வந்திருக்கிறேன் – விசித்திரன் பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு

உங்கள் ஆதரவோடு கொஞ்சம் கொஞ்சமாக நடிகனாக மாறி வந்திருக்கிறேன் – விசித்திரன் பட விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்ஸ்டூடியோ 9 நிறுவனர் சிவக்குமார் பேசியதாவது…* எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எங்கள் திரைப்படம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் நன்றி. *சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது…* மலையாளத்தில பல அவார்டுகள் அள்ளி குவிச...
ஜெய்பீமை போல் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

ஜெய்பீமை போல் கீர்த்தி சுரேஷின் அடுத்த படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழில் இயக்குனர் செல்வராகன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமசுடன் இணைந்து 'வாசி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு ஜி.ராகவ் இயக்கியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'வாசி' திரைப்படத்தை கீர்த்தி சுரேசின் அக்கா தன்னுடைய ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் போலவுள்ளது என ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்....
பாவாடை தாவணியில் வைரலாகும் சினேகா!

பாவாடை தாவணியில் வைரலாகும் சினேகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிரசன்னாவுடன் நடித்தபோது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது.     திருமணத்திற்கு பின்னரும் இருவரும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாவாடை தாவணியில் இருக்கும் சினேகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்....
பவுன்சராக களமிறங்கும் தமன்னா!

பவுன்சராக களமிறங்கும் தமன்னா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியான தமன்னா தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படமும், 5 தெலுங்கு படங்களும், ஒரு இந்தி படமும் கைவசம் உள்ளன. தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. பாரிஸ் பாரிஸ் படமும் முடிந்துள்ளது. இந்த நிலையில் ‘பப்ளி பவுன்சர்' என்ற இந்தி படத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தயாராகிறது. இதில் சவுரப் சுக்லா, அபிஷேக் பஜாஜ், சாஹில் வைத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். மது பண்ட்ராக்கர் டைரக்டு செய்கிறார். இந்த படம் தெலுங்கு, தமிழிலும் வெளியாக உள்ளது. தனது படம் 3 மொழிகளில் தயாராவதால் தமன்னா மகிழ்ச்சியில் இருக்கிறார்....
குஷியாக கேக் ஊட்டிய ரெய்சா I கண்ணீர் விட்ட விஷ்ணுவிஷால் I FIR success celebration

குஷியாக கேக் ஊட்டிய ரெய்சா I கண்ணீர் விட்ட விஷ்ணுவிஷால் I FIR success celebration

CINI NEWS, HOME SLIDER, kodanki darbar, kodanki voice, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    குஷியாக கேக் ஊட்டிய ரெய்சா I கண்ணீர் விட்ட விஷ்ணுவிஷால் I FIR success celebration   https://youtu.be/OEpyBdLdLzw