விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் “மருதம்”… அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது !!*
*விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் “மருதம்”... அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது !!*
Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
தற்காலத்திய சமூகத்தில் இன்னொருவனை ஏமாற்றித்தான் நாம் முன்னுக்கு வரவேண்டும், அது தவறில்லை என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் மேலோங்கிவிட்டது. இப்படிப்பட்ட சமூகத்தில் ஏமாற்றத்திற்குள்ளாகி பாதிகப்படும் ஒரு விவசாயி, அந்த பாதிப்பிலிருந்து மீள்கிறானா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மையம். பரபரப்பான சம்பவங்களுடன், அழுத்தமான திரைக்கதையில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும...








