“கமலி” ஆனந்தி எனக்கு பிடித்த கதாபாத்திரம்- கயல் ஆனந்தி பெருமிதம்!
கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் - 'கயல்' ஆனந்தி பெருமிதம்.
‘கமலி from நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது :
தயாரிப்பாளர் துரைசாமி பேசும்போது,
ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார்.
குமணன் பேசும்போது,
இப்படத்தை பெற்றோர்கள் பார்க்க வேண்டும். இப்படம் 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,
சேலம் மாவட்டம் சின்னனுர் கிராமத்தில் இருந்து வந்தவன்.
பொருளுக்காக பேசுவது, காரியத்திற்காக பேசுவ...









