வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

நடிகைகள்

‘அயலி’ ஜீ5 இணையத் தொடர் வெற்றிக் கொண்டாட்டம் !

‘அயலி’ ஜீ5 இணையத் தொடர் வெற்றிக் கொண்டாட்டம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜீ5 தளத்தின் 'அயலி' இணையத் தொடர் வெற்றிக்கொண்டாட்டம் !! இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5 தளம் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளை தந்து வருகிறது. இத்தளத்தில் சமீபத்தில் ஜனவரி 26, 2023 வெளியான “அயலி” இணையத் தொடர் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழ் ஓடிடி உலகில் புதிய சாதனை படைத்திருக்கும் இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின் விருப்பத் தேர்வாக முன்னணியில் உள்ளது. இந்த வெற்றியினை படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர். Senior Vice President ZEE5 கௌசிக் நரசிம்மன் பேசியதாவது... "அயலி எங்களது தளத்தில் வெளியான மற்றுமொரு படைப்பல்ல, இது எங்கள் மனதிற்கு நெருக்கமான மறக்க முடியாத படைப்பு. ஜீ5 லிருந்து நாங்கள் இந்த தொடரைச் செய்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறோம...
வைரலாகும் நடிகை பூர்ணாவின் புகைபடம்!

வைரலாகும் நடிகை பூர்ணாவின் புகைபடம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, சமீபத்தில் துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு பூர்ணா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்ததையடுத்து வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது புதிய போட்டோஷுட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ள பூர்ணா, "வாழ்க்கையின் மிகப் பெரிய அதிசயம், உங்களுக்குள் உயிர் வளர்வதுதான்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது லைக்குகளை குவித்து வருகிறது. https://www.instagram.com/p/CouXe-lh-ud/?utm_sourc...
வடக்குப்பட்டி ராமசாமியில் இணைந்த மேகா ஆகாஷ்!

வடக்குப்பட்டி ராமசாமியில் இணைந்த மேகா ஆகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சந்தானம் தற்போது 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் நடிக்கவுள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்த மேகா ஆகாஷ் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது....
சமந்தா ரூத் பிரபு,  வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ  இந்திய ஒரிஜினல்  சிட்டாடலில் நடிக்கிறார்!

சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திரைப்படத் தயாரிப்பில் தனித்துவம் வாய்ந்த இரட்டையர்களான ராஜ் & டிகே உருவாக்கத்தில், தயாராகிவரும் இந்த ஒரிஜினல் தொடர் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக காட்சிப்படுத்தப்படும் வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு வரிசை தேர்வுகளை விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான் பிரைம் வழங்குகிறது. இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499 மட்டுமே உறுப்பினர் சந்தா செலுத்துவ...
பாலியல் குற்றங்களின் சூழல் குறித்து பேசும் ”மெய்ப்பட செய்”

பாலியல் குற்றங்களின் சூழல் குறித்து பேசும் ”மெய்ப்பட செய்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் தயாரிப்பாளர் தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ஓ.ஏ.கே.சுந்தர், இயக்குநர் ராஜ்கபூர், ராகுல் தாத்தா, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள ’மெய்ப்பட செய்’ பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசியிருப்பதோடு, வேகமான காட்சிகளோடும், விறுவிறுப்பான திரைக்கதையோடும் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான படமாக உருவாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும், அப்படங்களில் குற்றங்கள் எதனால் நடக்கிறது? அல்லது குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?, போன்றவற்றைச் சொல...
நடிகை அமலா பாலுக்கு கேரளாவில் குருவாயூர் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

நடிகை அமலா பாலுக்கு கேரளாவில் குருவாயூர் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இந்துக்களை தவிர மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இதுபோல கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலிலும் மாற்று மதத்தவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து கேரளா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பாலும் நேற்று முன்தினம் உறவினர்களுடன் இக்கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுத்து விட்டனர். அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் மனம் வருந்திய நடிகை அமலா பால், கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் வரு...
ஜெயம் ரவி – நயன்தாரா நடிக்கும் இறைவன்!

ஜெயம் ரவி – நயன்தாரா நடிக்கும் இறைவன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & G. ஜெயராம் வழங்கும் 'ஜெயம்' ரவி, நயன்தாரா நடிப்பில், I. அஹமத் இயக்கத்தில் 'இறைவன்' படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு* பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் ஆகியோர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்கு படங்களை உருவாக்கியுள்ளனர். நம்பிக்கைகுரிய நிறைய படங்கள் தயாரித்து இருந்தாலும் இந்த வருடம் 2023-லும் வித்தியாசமான கதைக்களங்களை கைவசம் வைத்திருக்கின்றனர். அதில், I. அஹமது இயக்கத்தில் 'ஜெயம்' ரவி- நயன்தாரா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் 'இறைவன்' திரைப்படமும் ஒன்று. இதன் டைட்டில் மற்றும் முதல் பார்வையை ஹேண்ட்ஸம் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசியதாவது, "'இறைவன்' படத்தின் டைட்டில் & முதல் பார்வையை வெளியிடுவதில்...
‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!

‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார். இதன் பிறகு அவர் பேசுகையில், '' முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்...
ஆர்.ஜே. பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ படத்தின் புதிய அப்டேட் !

ஆர்.ஜே. பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ படத்தின் புதிய அப்டேட் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். 'ரன் பேபி ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மற்றும் லவிதா எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரன் பேபி ரன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://youtu.be/4K85nvNYp94...
எனக்கு முருங்கைக்காய் தர மறுத்த என் பாட்டி- “லாக்” விழாவில் ரகசியம் உடைத்த இயக்குனர் பாக்யராஜ்

எனக்கு முருங்கைக்காய் தர மறுத்த என் பாட்டி- “லாக்” விழாவில் ரகசியம் உடைத்த இயக்குனர் பாக்யராஜ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எனக்கு முருங்கைக்காய் தர மறுத்த என் பாட்டி- “லாக்” விழாவில் ரகசியம் உடைத்த இயக்குனர் பாக்யராஜ்   பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். 'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசும்போது, "இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்களது பக்க ...