திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

நடிகைகள்

கார் விபத்து – நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கார் விபத்து – நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கார் விபத்து - நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் நேற்று நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார். அப்போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அவர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடிகை யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நடிகை யாஷிகா மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது என்பன உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பத...
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி!

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி! குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்த ஷாலினி, கடந்த 1997- ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரவேண்டும் என பல திரைப்படங்களில் நடித்தார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினிக்கும் அஜித்துக்கு இடையே காதல் மலர்ந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும் ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணம் முடிந்த பிறகு நடிகை ஷாலினி படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஷாலினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் மண...
பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா… வைரலாகும் புகைப்படம்!

பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா… வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா... வைரலாகும் புகைப்படம்! பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார். பின்னர் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய...
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்த ஐஸ்வர்யா ராய்! மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் மீண்டும் தொடங்கி இருக்கிறது. இதில் முக்கிய காட்சிகளை படமாக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருக்கிறார். இதனால் நடிகர்கள் கார்த்திக், பார்த்திபன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பாண்டிச்சேரி சென்று உள்ளனர். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளர். இங்கு நடைபெறும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனைவரும் ஐதராபாத் செல்ல இருக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் படத்தின் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது....
சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா!

சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமந்தா, காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா! கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதையடுத்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், குறுகிய காலத்தில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அங்கு அமிதாப் பச்சன், சித்தார்த் மல்ஹோத்ரா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகாவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில், அதிக பாலோவர்களை கொண்ட ...
பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்!

பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகரின் படத்தில் நிவேதா பெத்துராஜுக்கு நக்சலைட் வேடம்! ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதையடுத்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் கைவசம் பார்ட்டி, பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘விராட பருவம்’. வேணு உடுகுலா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ், நக்சலைட்டாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக...
ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால் நடிகை நிதி அகர்வால் கோபம்!

ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால் நடிகை நிதி அகர்வால் கோபம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால் நடிகை நிதி அகர்வால் கோபம்! ஜெயம் ரவி ஜோடியாக பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் நிதி அகர்வால் ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் லீக் ஆனதால், அவர் கோபமடைந்துள்ளார். நடிகை நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அவர் ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படங்களை யாரோ வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டனர். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். இதனால் கோபமடைந்த நிதி அகர்வால், இதுகுறித்து கூறியதாவது, “என்னுடைய குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிரப்படுவதை பா...
நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி! தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு (Kurian Kodiyattu) உடல்நலக்குறைவால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....
‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?… நடிப்பது யார்? – முழு விவரம்!

‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?… நடிப்பது யார்? – முழு விவரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?... நடிப்பது யார்? - முழு விவரம்! கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில், இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களின் தலைப்பு மற்றும் அதில் யார் யார் பணியாற்றி உள்ளார்கள் என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதனை இந்த தொகுப்பில் காணலாம். கிட்டார் கம்பி மேலே நின்று 'காதல்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'கிட்டார் கம்பி மேலே நின்று' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா, ப்ரயாகா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். பிராஜக்...
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை!

திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீரென கவர்ச்சிக்கு மாறிய ஜகமே தந்திரம் பட நடிகை! மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2019ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்‌ஷன்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்த அவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். வழக்கமாக மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தும் அவர், அண்மையில், சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, அதிக லைக்குகளையும் பெற்று வருகிறது....