சனிக்கிழமை, மே 30
Shadow

நடிகைகள்

வீரமாதேவியின் ஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்..!

வீரமாதேவியின் ஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் ‘வடகறி’ படத்தின் ஒரு பாடல் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது ‘வீரமாதேவி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை 'சாமிடா', 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்', 'சவுகார்பேட்டை', 'பொட்டு', 'கன்னியும் காளையும் செம காதல்' ஆகிய படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனத்திற்காக பொன்சே ஸ்டீபன் தயாரிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,  சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து சில நாட்கள் இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது....
விமல்-ஓவியா ஜோடி மீண்டும் இணைந்த களவாணி 2 சாதிக்குமா..!?

விமல்-ஓவியா ஜோடி மீண்டும் இணைந்த களவாணி 2 சாதிக்குமா..!?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விமல், ஓவியா நடிக்கும் களவாணி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 6) தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது. 2010ஆம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் ஓவியா தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். சற்குணம் இயக்கத்தில் உருவான அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில் இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. களவாணி படத்தின் தயாரிப்பாளர் களவாணி 2 என்ற டைட்டிலை முறைப்படி பதிவு செய்திருப்பதாகவும் அதே பெயரில் மற்றொரு படம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு இயக்குநருக்கா, தயாரிப்பாளருக்கா என்பதில் சர்ச்சை தொடர்வதால் விமல், ஓவியா, சற்குணம் என பழைய கூட்டணி மீண்டும் தஞ்சாவூர் வட்டாரக் கதையில் இறங்கியிருந்தாலும், படத்தின் தலைப்பைக் களவாணி 2 என குறிப்பிடப்படாமல் K2 என்றே போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்....
குறும்பட இயக்குனரின் ஹாரர் படத்தில் நயன்தாரா..!

குறும்பட இயக்குனரின் ஹாரர் படத்தில் நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சமூக வலைத்தளங்களை கலக்கிய ‘லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் சில மாதங்களுக்கு முன்பாக ‘லட்சுமி’ என்ற குறும்படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு பக்கம் ஆதரவும் மற்றொரு பக்கம் எதிர்ப்பும் ‘லட்சுமி’ குறும்படத்திற்கு அமைந்தது. கலவையான விமர்சனத்தை எதிர்க்கொண்டாலும் மக்களிடையே அதிகமாக சென்றடைந்தது. இந்த குறும்படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கி இருந்தார். இவருடைய இயக்கத்தில் ‘மா’ என்ற குறும்படம் சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சர்ஜுன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படம் முழுக்...
அஜித்துக்கு  ‘விஸ்வாசம்’ ஜோடியாக நயன்தாரா..!

அஜித்துக்கு ‘விஸ்வாசம்’ ஜோடியாக நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு வருகிற 22-ந்தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கும் சிவா, 4-வது முறையாக அஜித்துடன் இணைகிறார். இந்த படத்தில் இளமை தோற்றத்தில் அஜித் நடிக்கிறார், வடசென்னை தாதாவாக வருகிறார், என்று தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. என்றாலும், இது பற்றி இயக்குனர் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் ஜோடி கீர்த்திசுரேஷ் என்று முதலில் கூறப்பட்டது. அடுத்து ஆத்மிகா, ஷரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அஜித்துடன் ‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்கிறார் நயன்தாரா....
13 ஆண்டாகியும் விடாது விரட்டும் ‘கற்பு’ வழக்கு கோர்ட்டில் ஆஜராக குஷ்புவுக்கு உத்தரவு..!

13 ஆண்டாகியும் விடாது விரட்டும் ‘கற்பு’ வழக்கு கோர்ட்டில் ஆஜராக குஷ்புவுக்கு உத்தரவு..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நடிகை குஷ்பு தமிழக பெண்களின் கற்பு குறித்து கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரை சேர்ந்த பா.ம.க. வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த முருகன் 2005-ம் ஆண்டு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் குஷ்பு நேரில் ஆஜராகி திரும்பும்போது ஒரு கும்பல் குஷ்பு கார் மீது அழுகிய முட்டை, தக்காளி போன்றவற்றை வீசியது. இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் அளித்த புகாரின்பேரில் மேட்டூர் போலீசார் பா.ம.கவை சேர்ந்த அறிவழகன் உள்பட 41 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் ஜெகநாதன், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை குஷ்பு, வழக்கு குறித்து விசாரணை செய்த அப்...
நடிகை கௌதமி தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம்..!

நடிகை கௌதமி தலைமையில் புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
சென்னை பெசண்ட் நகரில் LIFE AGAIN FOUNDATION உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் விழிப்புணர்வு கூட்டம் ஒன்று WINNERS WALK என்ற பெயரில் நடிகை கௌதமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி்க்கு கௌதம் மேனன், பத்மபூஷன் ,பத்மவிபூஷன் Dr.ஷாந்தா, அன்பழகன், தயாரிப்பாளர் கலைப்புலி.S.தானு ,தேவையானி ஜெயம் மோகன்ராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.   இந்த நிகழ்ச்சியில் நடிகை கௌதமி பேசியதாவது "Dr.ஷாந்தா தமிழ்நாட்டை புற்றுநோய் இல்லாத மாநிலமாக மாற்ற நிறைய முயர்ச்சிகளை மேற்க்கொண்டார்.அவருக்கு மிகப்பெரிய நன்றி. LIFE AGAIN FOUNDATION இன்று நடத்திய WINNERS WALK  நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது.   இந்த நிகழ்ச்சி நோக்கம்,கேன்சரை குணப்படுத்தலாம் அதை வெல்லலாம் என்ற எண்ணம் எல்லார்க்கும் தெரிய வரவேண்டும் என்பதே ஆகும்.கேன்சர் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் பயப்படுகிறார்கள்.அதை எதிர்...
புற்று நோய்க்கு எதிரான வெற்றியாளர் நடை பயணத்துக்கு கவுதமி அழைப்பு..!

புற்று நோய்க்கு எதிரான வெற்றியாளர் நடை பயணத்துக்கு கவுதமி அழைப்பு..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
உலக புற்று நோய் தினம். இதை வலியறுத்த எங்களது Life Again Foundation வெற்றியாளர்களின் நடை- Winner's Walk  என்ற தொடர் நடை நிகழ்வை  நாளை காலை 7 மணிக்கு அடையார் ஆல்காட் பள்ளி வளாகத்தில்  உள்ளது. இன்றைய நடைமுறை உலகில் தவிர்க்க முடியாத நோய்களில் ஒன்றாக உள்ளது புற்றுநோய். இந்தியர்களான நாம் அன்றாடம் பலத்தரப்பட்ட புற்றுநோய்களுக்கு ஆளாகும் நிலையில் இருக்கிறோம். இதை எதிர் கொள்வதற்கு நம்மிடமுள்ள மிகப்பெரிய ஆயுதம் அதை பற்றி அறிந்து கொள்வதும் அதற்காக தயாராக இருப்பதும் தான். உறுதியான மனதும், உடனடியாக அணுகுமுறையும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள இன்றியமையாதவை. புற்றுநோயை விடவும் பெரிய போராட்டமும் சவாலும் எதுவும் கிடையாது. இந்த புற்றுநொயை உண்மையான உறுதியுடனும் புன்னகையுடனும் தைரியத்துடனும் எதிர்கொண்டு வென்ற நாயகர்கள் பலர் உண்டு.  இவர்களே எனக்கு மிகப்பெரிய முன்னுதாரணங்கள். எங்களது இந்த வெற்றியாளர் நடை -  ...
பணம்,புகழ் படுத்தும் பாடு மாடலிங் நடிகைகளின் அடச்சீசீசீ லெவல்..!

பணம்,புகழ் படுத்தும் பாடு மாடலிங் நடிகைகளின் அடச்சீசீசீ லெவல்..!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நிர்வாண போஸ் கொடுத்து அதிர்ச்சீ அளித்த சகோதரிகள்..! அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடலிங் சகோதரிகள் ஜிஜி ஹடிட். பெல்லா ஹடிட். இவர்கள் இருவரும் மாடலிங்கில் சிங்கிள் பீஸ், டூ பீஸ் என பல நீச்சல் உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடிப்பார்கள். இவர்களுக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒரு இதழின் அட்டை படத்திற்காக சகோதரிகள் இருவரும் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து அதிர்ச்சியளித்திருக்கிறார்கள். இது தவிர தனித்தனியாகவும் நிர்வாண போஸ் கொடுத்திருக்கிரார்களாம். இந்த புத்தகம் மார்ச் மாதம் தான் வெளியாக உள்ளது அதற்குள் சகோதரிகள் முந்திக்கொண்டு தங்கள் நிர்வாண அழகை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட இணையத்தில் வைரலாகி இருக்கிறது அந்த படங்கள்....
தொழில் அதிபர் மீது நடிகை ஜீனத் அமன் பாலியல் புகார்

தொழில் அதிபர் மீது நடிகை ஜீனத் அமன் பாலியல் புகார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மும்பை ஜூகு பகுதியில் வசித்து வருபவர் நடிகை ஜீனத் அமன். 1970 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் பல படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். இவர் தனது நடிப்பு திறமைக்காக 3 முறை பிலிம்பேர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்தி சினிமாவில் நுழைவதற்கு முன் ‘மிஸ் இந்தியா’ போட்டியில் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்தவர். மேலும் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தையும் வென்றெடுத்தவர். தற்போது 66 வயதாகும் ஜீனத் அமன் மும்பை ஜூகு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், தனது குடும்ப நண்பரும், தொழில் அதிபருமான அமர்கன்னா என்பவர் தன்னை மானபங்கம் செய்ததாக கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நடிகை ஜீனத் அமனும், தொழில் அதிபர் அமர் கன்னாவும் குடும்ப நண்பர்கள். இந்த நிலைய...
உலக மகளிர் தினமான மார்ச் 8ல் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு டும் டும்..!

உலக மகளிர் தினமான மார்ச் 8ல் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு டும் டும்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகா் பார்த்திபன் சமீபகாலமாக ரஜினி,கமல், ஏ.ஆா். ரகுமான் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களை சந்தித்து வருகிறார். அவா் எதற்காக அவா்களை எல்லாம் சந்தித்து வருகிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. அது தற்போது தெரிய வந்துள்ளது. பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுயுள்ளதாம். அதற்கான அழைப்பிதழ் கொடுக்கவே சினிமாவின் முக்கிய பிரபலங்களை அவா் சந்தித்து வருகிறாராம். இவருடைய மகள் கன்னத்தில் முத்தம் இட்டால் மணிரத்னம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சில படங்களில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கீா்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஒட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது....