ரஷிய காதலருடன் நடிகை ஸ்ரேயாவுக்கு உதய்பூரில் திருமணம்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஸ்ரேயா. இவர் சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. எனக்கு 20 உனக்கு 18 என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி ரஜினிகாந்த், விஜய், விஷால், தனுஷ், ஜெயம் ரவி என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
ரஜினியுடன் நடித்த ‘சிவாஜி’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது. பாலகிருஷ்ணாவுடன் நடித்த கவுதமி புத்ர சாதகர்னி சரித்திர படமும் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். கடைசியாக சிம்புவுடன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் திரைக்கு வந்தது.
தற்போது அரவிந்த்சாமியுடன் நரகாசுரன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். நானே படேகருடன் தட்கா என்ற இந்தி படத்திலும் வீர போக வசந்த ராயலு என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஸ்ரேயாவுக்கு தற்போது 35 வயது ஆகிறது. எனவே அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோ...









