இலங்கையில் நடந்த தமிழ்பட பூஜை
“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை TJ.பானுவால் இணைந்தது இந்தியாவும் இலங்கையும்…
“கயல் வின்சன்ட்” மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த T.J.பானு நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பு, பூஜையுடன் இலங்கையில் ஆரம்பமாகியது.
ஓசை பிலிம்சின் கலை வளரி சக இரமணா - சுகா , விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரடக்ஷன்சின் சிரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறயிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர்.
இத்திரைப்படத்தை கயல் வின்சன்ட் மற்றும் T.J பானுவுடன் சேர்ந்து இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், செளமி போன்றோரும் தமிழகத்திலிரு...









