புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

நடிகைகள்

உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா!

உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா! மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட இவரது, இமேஜை குக் வித் கோமாளி நிகழ்ச்சி முற்றிலும் மாற்றியது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷகிலா, தற்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு காரணமாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில், ஒன்றை உங்களுக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள். உங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்” என...
நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா!

நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை சமந்தா மவுனம் காப்பது ஏன் தெரியுமா! நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக அரசும் இந்த தொடருக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இந்த சர்ச்சைகள் குறித்து நடிகை சமந்தா, எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அவரது அமைதிக்கான காரணம் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா, சர்ச்சைகளுக்கு பதிலளித்தால், அது இந்த தொடருக்கு, எதிர்மறையான விமர்சனங்களை தரும் என்பதால், இந்த விவகாரம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என இந்...
நடிகை ரைசாவின் படுகவர்ச்சியான போட்டோஷூட்!

நடிகை ரைசாவின் படுகவர்ச்சியான போட்டோஷூட்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை ரைசாவின் படுகவர்ச்சியான போட்டோஷூட்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது உள்ளாடை அணியாமல், சட்டை பட்டன் போடாமல், படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், இந்த சமயத்தில் இத்தகைய புகைப்படங்கள் தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்....
பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி!

பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி! இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை சென்றார். அந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிக்க வந்த புதிதிலிருந்தே, தனது பெயரை ஜனனி ஐயர் என்று தான் குறிப்பிட்டு வந்தார். சமூக வலைதளங்களிலும் அந்தப்பெயரையே பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், ‘மாற்றம் ஒன்றே மாறாதது, என்றும் ஒற்றுமையுடன்’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் தனது பெயரிலிருந்த ஜாதி அடையாளத்தை நீக்கி உள்ளார் நடிகை ஜனனி. அவரின் இந்த மாற்றத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால் ஏன் இந்த திடீர் ஜாதி துறப்பு என்பதை நடிகை ஜனனி விளக்...
இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்! சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தற்போது சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு, அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டார். இது அவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் ஆகும். இந்நிலையில், அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வெங்கட் பிரபுவின் 10-வது படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு பிர...
சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்! இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற 34 சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தில் புதிதாக வீடு ஒன்று வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.31 கோடி ஆகும். இது 5 ஆயிரத்து 704 சதுர அடியில் இரண்டடுக்கு வகையை சேர்ந்த வீடு ஆகும். இதில் 6 வாகனங்களை நிறுத்த நவீன முறையில் வசதி உள்ளது. இதற்காக முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.62 லட்சத்தை அமிதாப் பச்சன் செலுத்தி உள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 பங்களா வீடுகள் இருக்கும் நிலையில், தற்போது 5-வதாக புதிய வீடு வாங்கி உள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் ஒரு வீடு வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்!

விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்! தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் விஷால் மீது பாலியல் புகார் கூறி இருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில், நான் சினிமா துறையில் பாலியல் வேட்டையாடுபவர்களையும் துன்புறுத்தல்களையும் முதலில் கண்டிப்பது விஷால். புதியதாக சினிமாவில் நுழையும் பெண்களுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் பாலியல் துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார். நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன் படுத்தி தூக்கி வீசி விட்டீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியை கையாண்டு இருக்கிறீர்கள். உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையால் பல பெண்...
நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்! நடிகை சாந்தினி கொடுத்த புகார் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் செல்போனில் பேசி நிருபர்கள் பேட்டி எடுத்தனர். மணிகண்டன் கூறியதாவது:- நடிகை சாந்தினி என்பவரை யார்? என்றே எனக்கு தெரியவில்லை. நான் அரசியல்வாதி. ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது எத்தனையோ பேர் என்னை சந்தித்தனர். அது போல சாந்தினியும் என்னை சந்தித்திருக்கலாம். அந்த புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எனது அரசியல் எதிரிகள் பின்னணியில் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கலாம். 3 நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் என்னிடம் பேசினார்கள். சாந்தினியுடன் நீங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதை வைத்து போ...
கோலிவுட்டை தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் டோலிவுட்டுக்கு செல்கிறார்!

கோலிவுட்டை தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் டோலிவுட்டுக்கு செல்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
கோலிவுட்டை தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் டோலிவுட்டுக்கு செல்கிறார்! மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார். தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில் கார்த்தி, சூர்யா ஆகியோரின் படங்களில் நடித்து வரும் ரஜிஷா, விரைவில் தெலுங்கில் அறிமுகமாக உள்ளாராம். அவர் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கவுசிக் ஹீரோயினாக நடிக்கிறார் என்ப...
பிகினி போஸ் கொடுத்த ரீத்து வர்மா!

பிகினி போஸ் கொடுத்த ரீத்து வர்மா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிகினி போஸ் கொடுத்த ரீத்து வர்மா! தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரீத்து வர்மா. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான அவர், தற்போது கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகிலும் பிசியான நடிகையாக வலம்வருகிறார் ரீத்து வர்மா. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை ரீத்து வர்மா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரீத்து வர்மா. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருக...