‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’
E5 என்டர்டைன்மெண்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'.
'இசை ஞானி' இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படத்திற்காக காதலர் தினத்தன்று ‘வாலண்டைன் போஸ்டர்’ வெளியாகிறது.
இதில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால்.. இந்த போஸ்டர் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.
பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'.
இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி,
அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்த...









