விறுவிறுப்பான திரில்லர் படத்திற்காக மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு!
*விறுவிறுப்பான திரில்லர் படத்திற்காக மீண்டும் இணையும் ஜென்ம நட்சத்திரம் படக்குழு*
ஜென்ம நட்சத்திரம் படத்தை முடித்ததும், இயக்குநர் பி மணி வர்மன் மற்றொரு புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்துடன் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த கதை இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஜென்ம நட்சத்திரம் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
ஜென்ம நட்சத்திரம் திரைப்படம் இதுவரை வெளியாகாத நிலையில், அதற்குள் இயக்குநர் மணி வர்மனின் அடுத்தப் படத்தையும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ். அந்த வகையில், இயக்குநர் மணி வர்மன் இயக்கும் புதிய படத்தையும் முரளி கபிர்தாஸ் சார்பில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கதாநாயகனாக நடிக்கும் நடிகர் தமன் அக்ஷன் படத்தின் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார்...









