வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நடிகைகள்

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் –  வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்!

‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் – வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை தடை செய்ய வேண்டும் - வைகோ மத்திய மந்திரிக்கு கடிதம்! நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு தடைகோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தி பேமிலி மேன்-2 என்ற இந்தி வெப் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்த கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்த தொடரின் முன்னோட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களி...
கணவரை அடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட அனிதா ஹசானந்தனி!

கணவரை அடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட அனிதா ஹசானந்தனி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கணவரை அடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட அனிதா ஹசானந்தனி! தமிழில் வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. விக்ரம் நடித்த சாமுராய், எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஐஸ்வர்யாராயின் தால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு, இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கடந்த 2013-ம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை அனிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், நடிகை அனிதா, ‘அனைத்து மனைவிகளும் விரும்பும் ஒரு மேஜிக்’ என்று கூறி தனது கணவரை கன்னத்தில் அறைவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தயவு செய்து இதை வீட்டில் செய்து பார்...
பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா!

பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகருக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா! கேஜிஎப் படம் மூலம் மிகவும் பிரபல இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக கேஜிஎப்-2 படத்தை இயக்கிய முடித்துவிட்டு, தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது....
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு !

பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பேமிலிமேன் 2 வெப் தொடருக்கு சீமான் எதிர்ப்பு ! சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘தி பேமிலிமேன் 2’. இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தத் வெப்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எட...
சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு!

சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பீர் பாட்டிலால் மாடல் அழகியை தாக்கிய விவகாரம் - சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு! கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். நடிகை சஞ்சனா கல்ராணி, சமீபத்தில் போதை மருந்து வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு, பின்னர் பல மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாடல் அழகி வந்தனா ஜெயின் என்பவரை தாக்கியதாக தற்போது, நடிகை சஞ்சனா கல்ராணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடல் அழகி வந்தனா ஜெயின் மீது பீர் பாட்டிலை வீசி உடல்ரீதியாக தாக்கி, சஞ்சனா கல்ராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. சஞ்சனா கல்ராணி தாக்கியதில் வந்தனா ஜெயினுக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, வந்தனா சார்பில் கப்பன் பார்க் போலீசில் புகார் அ...
‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்!

‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘ஜகமே தந்திரம்’-முக்கிய அப்டேட்! பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 22-ந் தேதி ‘நேத்து’ என்கிற பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்படும் என அறிவி...
அவர் சொன்னால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் – நடிகை காஜல் அகர்வால்!

அவர் சொன்னால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் – நடிகை காஜல் அகர்வால்!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
அவர் சொன்னால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் - நடிகை காஜல் அகர்வால்! தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான காஜல் அகர்வால், பின்னர் அஜித், விஜய், கமல், தனுஷ் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கரம்பிடித்த அவர், திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் கைவசம் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கமல்ஹாசனின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா, கோஷ்டி போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி...
கொரோனா பாதிப்பு ‘பிக்பாஸ்’ வீட்டுக்கு சீல் ரூ.1 லட்சம் அபராதம்!

கொரோனா பாதிப்பு ‘பிக்பாஸ்’ வீட்டுக்கு சீல் ரூ.1 லட்சம் அபராதம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
‘பிக்பாஸ்’ வீட்டுக்கு சீல் ரூ.1 லட்சம் அபராதம் நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கு அமைத்து நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வருகிற 31-ந் தேதி வரை தொலைக்காட்சி மற்றும் சினிமா என எந்தவித படப்பிடிப்பும் நடக்காது என பெப்சி அறிவித்தது. ஆனால் 6 பேருக்கு கொரோனா உறுதியான பிறகும், ஊரடங்கு விதிமுறைகளை மீறி மலையாள ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக வந்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், மலையாள ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு நடைபெறும் அரங்கிற்கு சென்று நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை செய்தனர். இதையடுத்...
‘மக்கள் நீதி மய்யத்தில் அடுத்த எலிமினேஷன் யார்?’ கமல்ஹாசனை கலாய்க்கும் கஸ்தூரி!

‘மக்கள் நீதி மய்யத்தில் அடுத்த எலிமினேஷன் யார்?’ கமல்ஹாசனை கலாய்க்கும் கஸ்தூரி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
மக்கள் நீதி மய்யத்தில் அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் கலாய்க்கும்  கஸ்தூரி நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து விலகினர். அவரை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவர் பின் ஒருவராக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியை சார்ந்தவர்கள் விலகி வருவதை கலாய்க்கும் விதமாக, நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் "மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட  பத்மபிரியா, வேளச்சேரி தொகுதி போட்டியிட்ட சந்தோஷ் பாப...
நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா!

நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா! தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து சரத்குமாருடன் பச்சைக்கிளி முத்துச்சரம், கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை, விஜய்யுடன் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது ஒருகையில் நாயை வைத்து உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது....