வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா புத்தாண்டு கொண்டாட்டம்…! காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , காத்துவாக்குல ரெண்டுகாதல், மற்றும் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.   இந்நிலையில் இவர் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு தினம் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் நயன் தாரா இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இவர்களின் திருமணம் எப்போது என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது...
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் "மலர்" பர்ஸ்ட் லுக்! பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் "மலர்" டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை. கயல்விழி என்ற புதுமுக நடிகை மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு "திடீர் தளபதி" சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ...
வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

CINI NEWS, helth tips, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, sports, Trailer, Uncategorized, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம்
  வாசகர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - கோடஙகி
2020 ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான் – அமலா பால்

2020 ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான் – அமலா பால்

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
2020-ம் ஆண்டு, தான் கடந்து வந்த பாதை மற்றும் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் நடிகை அமலா பால். அமலா பால் இந்த ஆண்டு சில நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டது போல் தெரிகிறது. சமீபத்தில் தனது கற்றல்களை '2020 - அந்த ஆண்டு' என்ற தலைப்பில் பகிர்ந்துக் கொண்டார். இந்த ஆண்டு, தான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் ஏற்றுக்கொள்வது தான், என்று அமலா குறிப்பிட்டுள்ளார். "சரியில்லை என்பது சரியில்லை என்று நான் அறிந்துக் கொண்டேன். நீங்கள் சரியில்லை என்பதை ஏற்றுக் கொள்வது சரியில்லை. சரி? குணப்படுத்துதல் ஏற்றுக்கொள்வதில் தான் தொடங்குகிறது. நான் வலியிலிருந்து தப்பவில்லை. அது என்னைப் பாதிக்க அனுமதித்து, துன்பத்தின் மூலம் கற்றுக்கொண்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார் அமலா. https://twitter.com/Amala_ams/status/1344304475352141824?s=20 வாழ்க்கை தனது பாதையில் வீசிய அன...
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலிகுத்தி பாண்டி’ ஓடிடி தளத்தில் ரிலீஸ்?!

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலிகுத்தி பாண்டி’ ஓடிடி தளத்தில் ரிலீஸ்?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  குட்டிப்புலி கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘புலிகுத்தி பாண்டி’. கும்கி பட வெற்றிக் கூட்டணியான லட்சுமி மேனன் - விக்ரம் பிரபு ஆகியோர் மீண்டும் இணைந்துள்ள இத்திரைப்படத்தை சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ரகுநந்தன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்த படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. இந்நிலையில் டிசம்பர் 30-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தை ஜனவரி 1...
அமிர்தா ஐயர் லீக் செய்த வலிமை பட அப்டேட்?

அமிர்தா ஐயர் லீக் செய்த வலிமை பட அப்டேட்?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அமிர்தா ஐயர் லீக் செய்த வலிமை படத்தின் அப்டேட் பிகில் படத்தில் வரும் கால்பந்து வீராங்கனைகளில் கேப்டனாக வரும் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்தார் அமிர்தா ஐயர். தமிழ் சினிமாவில் தெனாலிராமன் லிங்கா போக்கிரி ராஜா தெறி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன்பின் படைவீரன் காளி படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தவிர மலையாளம் மற்றும் தெலுங்கில் தலா ஒரு படம் நடித்துள்ளார். இன்று காலை முதல் வலிமை படத்தின் அப்டேட் இல்லாததால் டுவிட்டரில் டிரெண்ட் பண்ணிக் கொண்டிருந்த தல ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். வலிமை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டு ஒரு பாடல் காட்சியை படம் பிடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அப்டேட்டும் வராத நிலையில் அமிர்தா ஐயர் இவ்வாறு லீக் செய்துள்ளதால் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளார்கள் அதுபோல அவர் வெளியிட்டுள்ள வீடி...
விராட் கோலிக்கும் அனுஷ்கா ஷர்மாவின் புதிய தொடக்கம்

விராட் கோலிக்கும் அனுஷ்கா ஷர்மாவின் புதிய தொடக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  2020-ம் ஆண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டுகளில் விராட் கோலி பதிவிட்ட அனுஷ்கா ஷர்மா கர்பமான செய்திதான் என ட்விட்டர் அறிவித்தது. அந்த அளவிற்கு அனுஷ்கா ஷர்மாவிற்கும் விராட் கோலிக்கும் குழந்தை பிறக்கும் செய்தி மகிழ்ச்சி அளித்திருக்கிறது. விரைவில் அம்மாவாகப்போகும் அனுஷ்கா ஷர்மா உலகப் பிரபலமடைந்த வோக் பத்திரிக்கைக்கு நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் அதாவது 2021 ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகப்போகும் வோக் இந்தியா பத்திரிக்கையின் கவர் ஸ்டோரிக்கான நேர்காணலை அனுஷ்கா அளித்திருக்கிறார். அந்த நேர்காணலில் அனுஷ்கா தன்னுடைய கர்ப்பகால நாட்கள் குறித்து பேசியுள்ளார். பிறக்கப்போகும் குழந்தை மீது அனுஷ்காவும், விராட் கோலியும் கொண்டிருக்கும் அன்பு குறித்தும், உறவினர்கள் எந்த அளவிற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கணவர் விரா...
“இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” ரஜினிகாந்த்தை  கலாய்த்த பிரபல நடிகை!

“இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” ரஜினிகாந்த்தை கலாய்த்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை பிரபல நடிகை கஸ்தூரி கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் முடிவு குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை!" என பதிவிட்டுள்ளார்   https://twitter.com/KasthuriShankar/status/13438190604971950...
ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரியில் திறப்புவிழா செய்ய தமிழக அரசு முடிவு!

ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரியில் திறப்புவிழா செய்ய தமிழக அரசு முடிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரியில் திறப்புவிழா செய்ய தமிழக அரசு முடிவு! சென்னை மெரினாவில், ரூ.57.8 கோடி மதிப்பில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் ரூ.57.8 கோடி மதிப்பில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள் உள்ளிட்டவை அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள...
வேலுநாச்சியார் கேரக்டரில் நடிகை நயன்தாரா?

வேலுநாச்சியார் கேரக்டரில் நடிகை நயன்தாரா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தமிழ் சினிமாவில் காதல், ஆக்‌ஷன், த்ரில்லர் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட வரலாற்று திரைப்படங்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப்பெற்று உலக சினிமாவை திரும்ப பார்க்க வைத்தது. வரலாற்றுக் கதைகளின் பக்கமும் சினிமா இயக்குனர்களின் ஆர்வம் திரும்பி இருக்கிறது. இயக்குனர் ராஜமவுலி பாகுபலி கதையை உருவாக்கிய பின் இந்த ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இந்தியில் நடிகை கங்கனாவின் மணிகர்னிகா உட்பட சில படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாயின. இதனைத் தொடர்ந்து யாருமே இதுவரை தொடாத பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாக அறிவித்தார். படத்தில் நடிப்பவர்கள் பட்டியலையும் வெளியிட்டார். அதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் என நட...