முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர், திருவாடனை தொகுதி எம்.எல் ஏ. கருணாஸ் அறிக்கை
தனது இளம் வயது முதல் தமிழ் இனம், தமிழ் மொழி என நெஞ்சில் இலட்சிய உறுதியோடு அயராது உழைத்த தமிழக அரசியலின் முன்னோடி எங்கள் மரியாதைக்குரிய பெருமகன் கலைஞர் கருணாநிதி அவர்கள். பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். பாசத்தோடு ‘தம்பி’ என அண்ணா அவரை அழைக்கும் உரிமை பெற்றவர். எனக்கு பின் என் தம்பிதான் திமுகவை வழிநடத்துவான் என வெளிப்படையாக பொதுமேடைகளில் அண்ணா பேசும் அளவுக்கும் அவருக்கு நம்பிக்கையை உருவாக்கியவர் . அதுமட்டுமின்றி இன்றோ – நாளையே தமிழக அரசியல் வரலாற்றின் முதற் பெரும் புள்ளியின் தொடக்கப்புள்ளி கலைஞர் கருணாநிதி என்றால் அது மிகையாது.
திமுகவின் முதல் தலைவராக 1969ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பொறுப்பேற்றார் கருணாநிதி. எனவே திமுக தலைவராக 50ம் ஆண்டில் அவர் 27.7.2018 இன்று அடியெடுத்து ...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் , ரத்தான இயக்குனர் சங்க செயலாளர், பெப்சி தலைவர் என பல பதவிகளில் இருக்கும் ஆர்.கே.செல்வமணி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் சங்கத்தின் முன்னாள் தலைவர் இயக்குனர் விசு, முன்னாள் செயலாளர் கவிஞர் பிறைசூடன் ஆகியோருக்கும் டிரஸ்ட் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர்கள் சங்கத்தின் பணம் 36 லட்சத்தை விசு, பிறைசூடன் ஆகியோர் கையாடல் செய்து விட்டார்கள் என சங்கத்தின் இப்போதைய தலைவர் பாக்யராஜ் புகார் அளித்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் விசு ஆடியோ மூலம் பாக்யராஜுக்கு பதில் சொல்லி இருந்தார்.
இந்த சூழலில் அந்த சங்கத்தின துணை தலைவர் ஆக உள்ள இயக்குனர் செல...
உலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முன்னதாக Vuclip President & COO அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா ஹெட் விஷால் மஹேஷ்வரி, இயக்குனர்கள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், புஷ்கர் காயத்ரி, வெங்கட் பிரபு, பார்த்திபன், தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு, துரைராஜ், சஞ்சய் வாத்வா, ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, துஷ்யந்த், ட்ரைடெண்ட் ரவீந்திரன், ராமமூர்த்தி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். Viu லோகோவையு...
வி.எஸ்.பி.புரொடக்ஷன்ஸ் சார்பில் விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம் `ஜுங்கா'.
விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக சாயிஷாவும், முக்கிய கதாபாத்திரங்களில் மடோனா செபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதா ரவி, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், நேகா சர்மா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஜூங்கா கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம்' என்கிறார் இயக்குனர் கோகுல்.
படம் வருகிற ஜூலை 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது
...
தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர்கள் டெல்லி கணேஷ், பிரபு, இமான் அண்ணாச்சி, ஓ ஏ கே சுந்தர், சூரி, ரமேஷ்கண்ணா, நடிகைகள் சுமித்ரா, உமா ரியாஸ், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், நடன இயக்குநர் பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா, பாடலாசிரியர் விவேகா இவர்களுடன் இயக்குநர் ஹரி, சீயான் விக்ரம், தயாரிப்பாளர் ஷிபு தமீன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில்,‘2002 ஆம் ஆண்டில் டைரக்டர் ஹரி இயக்கிய முதல் திரைப்படமாக ‘தமிழ்’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அந்...
அவதார் மூவிஸ் மற்றும் தாருண் கிரியேசன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "அழகு மகன்" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் அர்ஜுன் உதய் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியாக மாளவிகா வேல்ஸ் நடிக்கிறார்.
மற்றும் இளவரசு ராஜ்கபூர் ஜி.எம்.குமார்,சிங்கம்புலி,பவன் சேரன்ராஜ் செந்தி நித்திஸ் விசித்திரன் வைரவன் ஆகியோர் நடிக்கிறார்கள்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அழகன் செல்வா... இவர் இயக்குனர் யார் கண்ணன், கரு.பழனியப்பன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இவர் இயக்கும் முதல் படம் இது.
தயாரிப்பு - செல்வி ராஜேந்திரன், ஞானதேஸ் அம்பேத்கார்
படம் பற்றி இயக்குனர் அழகன் செல்வாவிடம் கேட்டோம்...
இது ஒரு பக்கா கமர்ஷியல் படம்.
தென்மாவட்ட மக்களின் உணர்வுகளையும் உணர்ச்சியையும் பிரதி பலிக்கும் படம்.
அன்பை பிரதிபலிப்பதும் அராஜகத்தை எதிர்த்த...
ஸ்டெய்லா கூலிங்கிளாஸ் போட்டு கோட் போட்டு இடுப்புல லுங்கி கட்டி ஒருத்தர் வந்தா எப்படி இருக்கும்... அப்படி இருக்கு "விண்வெளி பயண குறிப்புகள்" படம்.
டைட்டில் மார்டனா வைச்சிட்டு கதை முழுக்க கிராமத்து வாசனையில் இயக்குனர் அசத்தி இருக்கார்.
அப்படி என்ன கதை...
ஊரில் பெரிய தாதா ஆத்விக் ஜலந்தர் ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். பெண் அமைச்சர் ஒருவரின் ஆசியோட ஊரையே அடக்கி வைச்சிருக்கார். அவரை எதிர்க்க அந்த ஊரில் யாருக்கும் தைரியம் இல்லை.
ஜலந்தருக்கு சிறு வயதில் இருந்தே விண்வெளிக்கு போக வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வரும் ஒருவர் விண்வெளி பற்றி பேச, அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் ஜலந்தர். விண்வெளிக்குச் செல்ல பல கோடிகள் வரை செலவாகும் என்றும், அந்த பணத்தை கொடுத்தால் விண்வெளிக்கு போக தான் உதவி செய்வதாக அந்த நபர் கூறுகிறார்.
இதுக்...