திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

சினி நிகழ்வுகள்

சென்சார் அதிகாரிகள் பாராட்டிய  தானா சேர்ந்த கூட்டம் படம் ஒரு உண்மை சம்பவம் – சூர்யா

சென்சார் அதிகாரிகள் பாராட்டிய தானா சேர்ந்த கூட்டம் படம் ஒரு உண்மை சம்பவம் – சூர்யா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தானா சேர்ந்த கூட்டம் படம் ஒரு உண்மை சம்பவம் - சூர்யா ஸ்டுடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் சூர்யா , தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா , கீர்த்தி சுரேஷ் ,, ரம்யா கிருஷ்ணன் ,தம்பி ராமையா , சுரேஷ் மேனன் , இயக்குநர் விக்னேஷ் சிவன் , ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் , கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. இப்போது விக்னேஷ் ச...
அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி -கமல் மலேசியாவில் ஒரே மேடையில் பேசுகிறார்கள்..!

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி -கமல் மலேசியாவில் ஒரே மேடையில் பேசுகிறார்கள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சங்க கட்டடத்துக்கு நிதி திரட்டும் நடவடிக்கையாக தமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இன்று மலேசியா செல்கிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன. இதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங...
பேய் இருக்கா இல்லையா..?; ஆறாம் திணை பட விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ்

பேய் இருக்கா இல்லையா..?; ஆறாம் திணை பட விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பேய் இருக்கா இல்லையா..?; ஆறாம் திணை விழாவில் லாஜிக் சொன்ன பாக்யராஜ் MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜ் கே .சோழன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, திரையரங்குகள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் உதவியாளரான பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இசைத்தகட்டை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட திரு. அபி...
தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை தேவை: ஏ.ஆர்.ரகுமான்

தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை தேவை: ஏ.ஆர்.ரகுமான்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடி வருகிறார். இதற்காக சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். ‘நேற்று இன்று நாளை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி ஜனவரி 12ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இது குறித்து அவர் கூறும்போது, 'நான் அயல்நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது, சென்னையில் எப்போது இது போன்று இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறோம் என்ற எண்ணம் ஏற்படும். இப்போதுதான் அதற்கு நேரம் வந்துள்ளது. ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பற்றி கூறும்போது, ‘ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி. அவர்களுக்குள் ஏதோ ஆதங்கம் இருக்கிறது. அதனால் தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு வலுவான தலைமை வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். ரஜினிகாந்த் அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்கள் தேவையைப் பூர்த்தி ...
வேகமெடுக்கும் ரஜினி அரசியல்…  தாமதமாகும் கமல் அரசியல்… -கோடங்கி

வேகமெடுக்கும் ரஜினி அரசியல்… தாமதமாகும் கமல் அரசியல்… -கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
வேகமெடுக்கும் ரஜினி அரசியல்... தாமதமாகும் கமல் அரசியல்... -கோடங்கி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கம் மூலம் சமூக பிரச்சினைகள் பற்றி கடும் விமர்சனம் செய்து வந்தார். அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். அரசியல் அறிவிப்புக்கு பிறகு ஒரு காலை நேரத்தில் கொசஸ்தலை ஆற்றில் மாசு ஏற்பட்டுள்ளதைப் பார்த்து அதிரடி ஆய்வு செய்தார். அரசியலுக்கு முன்னோட்டமாக மையம் விசில் என்ற ஆப் ஒன்றை அறிமுகம் செய்தார். கமல் அரசியல் அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் பரவலாக காணப்பட்டது. அதன் பிறகு திடீரென கமல் அரசியல் கருத்துக்கள் எதையும் பதிவிடாமல் அமைதியானார். அதற்கு காரணம் விஸ்வரூபம்-2, சபாஷ் நாயுடு படங்களை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழல். இதற்காக கமல்ஹாசன் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். இந்த சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் புதிய புயலாக நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் செய்துள்ளார். கடந...
தமிழில் வெளியாகும் பிரமாண்டமான விண்வெளி படம் டிக்டிக்டிக் இசை வெளியீடு..!

தமிழில் வெளியாகும் பிரமாண்டமான விண்வெளி படம் டிக்டிக்டிக் இசை வெளியீடு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  இதற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.   இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டனர்.    இவ்விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஜெயப்ரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், அர்ஜுனன், பாலாஜி வேணுகோபால், நடிகைகள் நிவேதா பெத்துராஜ், ரித்திகா சீனிவாஸ், இசையமைப்பாள...
அமாவாசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் சிலர் நுழைந்ததால் ‘பலூன்’ நஷ்டம் – இயக்குனர் சினிஷ்

அமாவாசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் சிலர் நுழைந்ததால் ‘பலூன்’ நஷ்டம் – இயக்குனர் சினிஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தொழில் நடைமுறை தெரியாத அமாவாசை சத்யராஜ் போல் திரைத்துறைக்குள் சிலர் நுழைந்ததால் 'பலூன்’ நஷ்டம் - இயக்குனர் சினிஷ் ஜெய், அஞ்சலி, ஜனனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பலூன்'. இப்படத்தை சினிஷ் இயக்கியிருந்தார். யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் இயக்குனர் சினிஷ் படம் வெற்றி ஆனல், நான் மகிழ்ச்சியில் இல்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் இப்படம் குறித்து டுவிட்டரில் சில கருத்துகளை பதிவு செய்திருக்கிறார். அதில், ‘பலூன்’ வெற்றி... தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி... இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை. சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் த...
தணிக்கை குழுவிடம் ‘யு’ பெற்ற உதயநிதியின் ‘நிமிர்’

தணிக்கை குழுவிடம் ‘யு’ பெற்ற உதயநிதியின் ‘நிமிர்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தணிக்கை குழுவிடம் ‘யு’ பெற்ற உதயநிதியின் ‘நிமிர்’ உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நிமிர்’. இதில் இவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் மகேந்திரன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ப்ரியதர்ஷன் இப்படத்தை இயக்கியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்கள். தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி உள்ளனர். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், ‘யு’ வழங்கி சான்றிதழ் வழங்கியுள்ளனர். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்தை சந்தோஷ் டி குருவில்லா தயாரித்துள்ளார். இப்படம் அவரது சிறப்பான சினிமா வாழ்க்கையில் மற்றுமொரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என கூறப்படுகிறத...
6-ஆம் தேதி மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த்தின் ‘2.O’டீசர்..!

6-ஆம் தேதி மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த்தின் ‘2.O’டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
6-ஆம் தேதி மலேசியாவில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த்தின் ‘2.O’டீசர்..! ‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘2.O’. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை சங்கர் இயக்கியுள்ளார். ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், 2 மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதன் ஷூட்டிங் நிறைவடைந்து ...
கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன் – ரஜினிகாந்த்

கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன் – ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக கூறியுள்ளார். தான் செய்யப் போவது ஆன்மீக அரசியல் என்றும் அதில் உண்மை, நேர்மையை கடைபிடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே, தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்க போவதாக ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து இன்றிரவு 7.45 மணியளவில் புறப்பட்ட ரஜினிகாந்த், கருணாநிதி எனது நீண்ட கால நண்பர் என நிருபர்களிடம் கூறினார். சரியாக, 7..55 மணியளவில் கருணாநிதி வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அவருடன் சென்ற ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். கருணாநிதியை சந்தித்தபின் வெளியே வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிட...