செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

சினி நிகழ்வுகள்

ஸ்ரீதேவி உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

ஸ்ரீதேவி உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இந்திய திரையுலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றபோது கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார். ஓட்டலில் தங்கி இருந்த அவர் குளியலறைக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை.  அவர் மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக விசாரணையை துபாய் காவல்துறை மேற்கொண்டது. ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்ற நோக்கம் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த வழக்கை துபாய் போலீஸ் முடித்து வைத்தது. இதன்பிறகு, உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்...
ஒரு ரூபாய் கேட்டு பா.ஜ., எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு -நடிகர் பிரகாஷ்ராஜ்

ஒரு ரூபாய் கேட்டு பா.ஜ., எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு -நடிகர் பிரகாஷ்ராஜ்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
மைசூரு பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா. இவர் கடந்த ஆண்டு, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து டுவிட்டரில் ஒரு அவதூறான கருத்தை பதிவிட்டார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், உடனடியாக அதுபற்றி விளக்கம் கேட்டு பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அந்த நோட்டீசுக்கு பிரதாப் சிம்ஹா இதுவரையில் எந்தவித பதிலும் அனுப்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நேற்று மைசூரு கோர்ட்டில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் தன்னைப்பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா உடனடியாக அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும், மேலும் தனக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் மட்டும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது....
ரஷிய காதலருடன் நடிகை ஸ்ரேயாவுக்கு  உதய்பூரில் திருமணம்

ரஷிய காதலருடன் நடிகை ஸ்ரேயாவுக்கு உதய்பூரில் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் ஸ்ரேயா. இவர் சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. எனக்கு 20 உனக்கு 18 என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி ரஜினிகாந்த், விஜய், விஷால், தனுஷ், ஜெயம் ரவி என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். ரஜினியுடன் நடித்த ‘சிவாஜி’ படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது. பாலகிருஷ்ணாவுடன் நடித்த கவுதமி புத்ர சாதகர்னி சரித்திர படமும் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். கடைசியாக சிம்புவுடன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் திரைக்கு வந்தது. தற்போது அரவிந்த்சாமியுடன் நரகாசுரன் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். நானே படேகருடன் தட்கா என்ற இந்தி படத்திலும் வீர போக வசந்த ராயலு என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஸ்ரேயாவுக்கு தற்போது 35 வயது ஆகிறது. எனவே அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோ...
ஸ்ரீதேவி உடல் தனி விமானம் மூலம் இன்று இரவு மும்பை வர வாய்ப்பு உள்ளது

ஸ்ரீதேவி உடல் தனி விமானம் மூலம் இன்று இரவு மும்பை வர வாய்ப்பு உள்ளது

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் நடந்த கணவர் போனிகபூரின் மைத்துனர் மோகித் மார்வா திருமணத்தில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சி முடிந்ததும் இரவு தான் தங்கி இருந்த எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலுக்கு சென்று தங்கினார். அவருடன் கணவர் போனிகபூர், மகள் குஷி ஆகியோரும் தங்கி இருந்தனர். அப்போது குளியலறைக்கு சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் கணவர் போனிகபூர் கதவை தட்டினார். ஆனால் கதவை திறக்காததால்  பதட்டம் அடைந்த போனிகபூர் ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார். உள்ளே ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் சுயநினைவின்றி மூழ்கி கிடந்தார். இதைப் பார்த்து கதறித்துடித்த அவர் போலீசுக்கும்  ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து ஸ்ரீதேவியை மீட்டு  ஆஸ்பத்திரிக்கு கொண்டு  சென்றனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். துபாய் நாட்டின் கடுமையா...
ஸ்ரீதேவி மரணம்: விடை தெரியாத கேள்விகள்..!

ஸ்ரீதேவி மரணம்: விடை தெரியாத கேள்விகள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அவருடைய மரணம் தொடர்பாக  மிகப் பெரிய கேள்விகள் எழுந்துள்ளன. * போனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக் கொண்டு சென்றபோது மாலை 6.25 மணி என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து துபாயைச் சேர்ந்த நண்பரின் அறிவுரைக்கு பிறகு இரவு 9 மணிக்குத்தான் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். ஏன் இந்த தாமதம்?... * போனிகபூர் இதுபோன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஓட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை?... * ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்பதை யார், எதற்காக கூறினார்கள்? விடை காணமுடியாத கேள்விகளாக இவை உள்ளன.  ...
விஸ்வாசம் படத்தில் இணையும் யோகி பாபு – ரோபோ சங்கர் கூட்டணி..!

விஸ்வாசம் படத்தில் இணையும் யோகி பாபு – ரோபோ சங்கர் கூட்டணி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் - சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். யோகி பாபு - ரோபோ சங்கர் கூட்டணி இணையும் பட்சத்தில் இருவரும் காமெடியில் கலக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருவரும் ஏற்கனவே வீரசிவாஜி, மன்னர் வகையறா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...
ராஜஸ்தான் செல்லும்  ‘சாமி-படக்குழு..!

ராஜஸ்தான் செல்லும் ‘சாமி-படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விக்ரம் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘சாமி-2’ படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘சாமி-2’ படத்தின் படப்பிடிப்பு நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ்வின் மகனாக இந்த பாகத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வடஇந்தியாவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக நடிகர் விக்ரம் உள்ளிட்ட படக்குழு மார்ச்சில் ராஜஸ்தான் செல்லவிருக்கிறது. அங்கு படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. இப்படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாகவும், விவேக், பிரபு, சூரி, ஓஏகே சுந்தர், ஜான் விஜய் உள்ளிட்ட ...
கோலமாவு கோகிலா வைக்கும் முதல் புள்ளி..!

கோலமாவு கோகிலா வைக்கும் முதல் புள்ளி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
லைகா நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு நயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன் ஆகிய மூன்று படங்கள் வந்தன. அறம் படத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் மாவட்ட கலெக்டராக நடித்த அவரது கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன. கிளைமாக்சில் நயன்தாரா அரசியலுக்கு வருவதுபோன்று கதையை முடித்து இருந்தனர். இந்த வருடம் அவர் கைவசம் அதிக படங்கள் உள்ளன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்த `ஜெய்சிம்ஹா’ என்ற தெலுங்கு படம் ஜனவரியில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய மூன்று படங்களும் உருவாகி உள்ளது.  இதில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கு அனி...
மாதவனுக்கு திடீர் அறுவை சிகிச்சை..!

மாதவனுக்கு திடீர் அறுவை சிகிச்சை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
மாதவன் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக  டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருபவர் மாதவன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது ‘ப்ரீத்’ என்ற வெப்சீரியலில் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் ’விண்ணை தாண்டி வருவாயா-2’ படத்தில் நடிக்க உள்ளார். மாதவன் கொஞ்ச நாட்களாகவே தோள்பட்டை வலியில் அவதி பட்டு வந்தார். கடந்த வாரம் கடுமையான வலி காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் ஆலோசனையின் படி உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது தோள் பட்டையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும், விரைவில் குணமடைந்து வருவதாகவும், வலது கை இருப்பதையே உணர முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை கண்ட மாத...
சம்பள பாக்கி  புகார் கவுதமி மீது கமல் நிறுவனம் சந்தேகம்..!

சம்பள பாக்கி புகார் கவுதமி மீது கமல் நிறுவனம் சந்தேகம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகை கவுதமி, நடிகர் கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் திருமணம் செய்யாமல் வாழ்ந்தவர். பின்னர் திடீரென கமல்ஹாசனுடன் உறவை முறித்து கொண்டு தனது மகளுடன் தற்போது அவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம் மற்றும் ‘தசாவதாரம்’ ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், இதற்காக அவருக்கான சம்பளத்தை ராஜ்கமல் நிறுவனம் தரவில்லை என்றும் திடீரென குற்றசாட்டை எழுப்பினார்.கமல் கட்சி ஆரம்பித்து இரண்டே நாளில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் மீது சமூக வலைத்தள பயனாளிகள் கடும் விமர்சனத்தை வைத்தனர். தனது படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு சம்பளத்தை ஒழுங்காக கொடுக்காத கமல், எப்படி நாட்டை ஊழலில் இருந்து காப்பாற்ற போகிறார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பினர்இந்த நிலையில் கவுதமியின் குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் பதிலளித்துள்ளது. தசாவதாரம்’ படத் தயா...