புதன்கிழமை, ஜூன் 10
Shadow

சினி நிகழ்வுகள்

அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காலா

அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காலா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல் சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது படத்தின் புரமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் காலா எமோஜி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து காலா படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. பின்னர் இப்படத்தில் இடம் பெறும் ‘கண்ணம்மா...’ என்ற பாடலின் புரமோ வெளியானது. தற்போது காலா புரமோ ஆகியவை வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார்கள். இந்த புரமோவில், ‘நான் காலா... எமன், எமராஜ்’ என ரஜினி பேசும் வசனம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ...
காதலர்களின் மனபோராட்டமும் ஒரு ‘கார்கில்’ போர்..!

காதலர்களின் மனபோராட்டமும் ஒரு ‘கார்கில்’ போர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
காதலர்களின் மனபோராட்டமும் ஒரு ‘கார்கில்’ போர் தான்..!    தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு,, அப்படி புதிய முயற்சிகளின் மூலம் தான், புதிய படைப்பாளிகள், ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க முடியும். அப்படி ஒரு படம் தான், சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’. ஜிஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் என்ன புது முயற்சி என்றால், இந்தப்படத்தில் அவர் ஒரே ஒருத்தர் மட்டும் தான் நடித்துள்ளார்.  கார்கில் என்றதுமே இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் தான் மக்களுக்கு ஞாபகத்தில் வரும். ஆம்.. இதுவும் ஒரு போர் தான்..சென்னையிலிருந்து காரில் பெங்களுர் செல்லும் நாயகனுக்கும் அவன் காதலிக்கும் ஏற்படும் மன போராட்டமே இந்தப்படம். ஒரே ஒருத்தர்தான் நடித்துள்ளார், அப்படியானால் காதலி யார் என கேட்கிறீகளா..? அதுதான் படத்தின் ட்விஸ்ட்டே.  காதலில்...
எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடுதான் – ஆவேசத்துடன் கூறிய ரஜினிகாந்த்

எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடுதான் – ஆவேசத்துடன் கூறிய ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்வையிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது, தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக அவர் முன்னர் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்தது போல, தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் புகுந்து விட்டனர். போலீசார், ஆட்சியர் அலுவலகம், குடியிருப்புகளை தாக்கியது உட்பட அனைத்துக்கும் காரணம், சமூக விரோதிகளே. போலீசாரை அவர்கள் முதலில் தாக்கினர். அதன் பிறகே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காவல்துறை மீது தாக்குதல் நடத்தினால் ஒரு போதும் ஏற்றுகொள்ள மாட்டேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும். என ரஜினிகாந்த் மிகுந்த ஆவேசத்துடன் கூறினார்....
முக்தா சீனிவாசன் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு TMJA இரங்கல்

முக்தா சீனிவாசன் மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு TMJA இரங்கல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
இரங்கல் செய்தி தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மாளாபுரம் கிராமத்தில் இருந்து திரைத்துறைக்கு உதவி இயக்குநராக வந்து கலைத்துறையில் தனது கடின உழைப்பால் உயர்ந்து திரைப்பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், வசனகர்த்தாவாகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர் முக்தா சீனிவாசன். பழம் பெரும் இயக்குநர்கள் கே.ராம்னாத், வீணை எஸ்.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 1957-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘முதலாளி’. இந்த முதல் திரைப்படமே இவருக்கு ஜனாதிபதி விருதை பெற்றுத் தந்தது. முக்தா பிலிம்ஸ் மூலம் 41 திரைப்படங்களைத் தயாரித்து உள்ளார். 61 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் தயாரித்து, இயக்கிய ‘தாமரைக்குளம்’ திரைப்படத்தில்தான் ‘நகைச்சுவைத் திலகம்’ நாகேஷ் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் அந்தமான் காதலி என்றால்...
பார்த்திபன் படத்தில் காமெடியனாகும் ஓட்டல்கார

பார்த்திபன் படத்தில் காமெடியனாகும் ஓட்டல்கார

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனது குருநாதர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை வைத்து `கோடிட்ட இடங்களை நிரப்புக' என்னும் படத்தை இயக்கினார் பார்த்திபன். அடுத்ததாக உள்ளே வெளியே 2 படத்தை இயக்கவிருக்கிறார். முழுநீள காமெடி படமாக உருவாகும் அந்த படத்தில் ஒரு ஓட்டல்காரரை காமெடியனாக்கி இருக்கிறார். சினிமாவில் இருக்கும் நடிகர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை சாப்பிடும் ஓட்டல் ஒன்றை நடத்திவருபவர் கவிஞர் ஜெயம்கொண்டான். உதவி இயக்குனர்களுக்கு சலுகை விலை என்பதால் ஓட்டலில் கூட்டம் நிறையும். சில படங்களுக்கு பாடல்களும் எழுதி இருக்கிறார். இவரது ஓட்டலுக்கு சில நாட்களுக்கு முன்பு வந்த பார்த்திபன் ஜெயம்கொண்டானை தனது அடுத்த படத்தில் முழுநீள காமெடியனாக்குவதாகவும், அதற்காக தாடி வளர்க்க வேண்டும் என்றும் கூறி சென்றிருக்கிறார். இந்த இன்ப அதிர்ச்சியை எதிர்பார்க்காத ஜெயம்கொண்டான் பார்த்திபனுக்காக தாடி வளர்த்து வருகிறார்....
விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு  – இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்

விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு – இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் - இயக்குனர் சிவா 4-வது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்‘. இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் போனது. சமீபத்தில் ஐதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்து 2-ம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் இளமை தோற்றத்தில் கருப்பு முடியுடன் வருவார் என்றும் கூறப்படுகிறது. மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்து தீபாவளிக்கு விஸ்வாசத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறாராம். அதன்படி அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என...
மீண்டும் விஜய்யுடன் இணைகிறேன் – உறுதிப்படுத்திய ஜீவா

மீண்டும் விஜய்யுடன் இணைகிறேன் – உறுதிப்படுத்திய ஜீவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக விஜய் யாருடன் இணைவார் என்பது குறித்து இப்போதே விவாதம் துவங்கிவிட்ட நிலையில், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் அடிபடுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் அதிகமாக புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட். இந்த நிறுவனத்தின் அதிபர் சவுத்ரியின் மகன்கள் தான் நடிகர்கள் ஜீவாவும், ஜித்தன் ரமேசும். கடம்பன், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களுக்கு பிறகு படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் இந்நிறுவனம், விரைவில் ஒரே நேரத...
விஜய் 62 – நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு

விஜய் 62 – நடப்பு அரசியலை விமர்சிக்கும் படக்குழு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி, கமலை போலவே விஜய்க்கும் அரசியல் ஆசை எழுந்தது. மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். இதனால் ‘தலைவா’ படத்துக்கு சிக்கல் எழுந்தது. அதன் பின்னர் அரசியல் ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘மெர்சல் படத்தில் மத்திய அரசை குறைகூறும் வசனங்கள் இருந்ததால் தீவிர எதிர்ப்பு கிளம்பியது. தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவசாயிகளுக்காகவும் மீனவர்களுக்காகவும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் பணக்காரராக வருகிறார். விவசாயிகளுக்கு துரோகம் செய்து தங்கள் சுயநலனுக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளாக ராதா ரவியும் பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. தாய் கழகத்தில் இருந்து பிரிந்த பழ.கருப்பையா மீண்டும் தாய்க்கழகமான ராதா...
திருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு

திருமணம் நெருங்குவதால் சர்ச்சைகளில் சிக்காமல் இருக்க அனுஷ்கா அதிரடி முடிவு

CINI NEWS, HOME SLIDER, Uncategorized, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திருமணத்துக்கு தயாராகி விட்டார் அனுஷ்கா என்று தெலுங்கு மீடியாக்களில் செய்தி வந்துகொண்டிருக்கிறது. அதை உறுதிபடுத்தும் வகையில் இன்னொரு செய்தியும் வந்து இருக்கிறது. சமீபகாலமாக தான் ஒப்புக்கொள்ளும் படங்களில் நெருக்கமான காட்சிகளோ, கவர்ச்சி காட்சிகளோ இல்லாத மாதிரி பார்த்துக்கொள்கிறார். கதை சொல்ல தொடங்கும்போதே இந்த 2 கட்டுப்பாடுகளையும் இயக்குனர்களிடம் விதித்து விடுகிறார் அனுஷ்கா. காரணம் திருமணம் ஆகவிருப்பது தான் என்கிறார்கள். சமந்தா திருமணத்துக்கு பின் முத்த காட்சிகளில் நடித்தது சர்ச்சையை உண்டாக்கியது. அந்த படம் திருமணத்துக்கு முன்பே ஒப்புக்கொண்டது. எனவே அதேபோன்ற சர்ச்சைக்குள் சிக்க அனுஷ்கா விரும்பவில்லை. எனவே தான் திருமணமாகும் சமயத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்கிறார்கள்....
இளமையும், புதுமையும் இணையும் இந்தியன்-2

இளமையும், புதுமையும் இணையும் இந்தியன்-2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Uncategorized, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கமல்ஹாசன் அடுத்ததாக ‌ஷங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2' படத்தில் நடிக்கிறார். 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான `இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். எப்போதும் ஏ.ஆர்.ரகுமானுடனேயே பயணிக்கும் ‌ஷங்கர் இந்த முறை அனிருத்துடன் இணைகிறார். இந்த படத்தில் இன்னொரு ஆச்சர்யமும் நடக்க இருக்கிறது. படத்தில் ஒரு பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதுகிறார். ஷங்கர் படத்தில் தாமரை பாடல் எழுதுவதும் இதுதான் முதல்முறை. கமல்ஹாசனுடன் இணைந்தாலும் ‘இளமையும் புதுமையும் வேண்டும்’ என்று ‌ஷங்கர் முடிவு செய்திருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் தொழில்நுட்ப கலைஞர்களை `இந்தியன்-2' வுக்காக சேர்க்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது....