ஸ்ரீதேவி உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
இந்திய திரையுலகின் கனவுக்கன்னி என்று வர்ணிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றபோது கடந்த 24-ந் தேதி மரணம் அடைந்தார். ஓட்டலில் தங்கி இருந்த அவர் குளியலறைக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது.
உடற்கூறு ஆய்வுக்கு பிறகு, ஸ்ரீதேவி மாரடைப்பால் இறக்கவில்லை. அவர் மது போதையில், குளியல் தொட்டியில் விழுந்து, மூச்சு விடமுடியாமல் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஸ்ரீதேவி உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக விசாரணையை துபாய் காவல்துறை மேற்கொண்டது. ஸ்ரீதேவியின் மரணத்தில் குற்ற நோக்கம் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த வழக்கை துபாய் போலீஸ் முடித்து வைத்தது.
இதன்பிறகு, உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்...









