புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

விஜய் சேதுபதி வெளியிட்ட பவுலின் ஜெசிகாவின்  “வாய்தா” மோஷன் போஸ்டர்!

விஜய் சேதுபதி வெளியிட்ட பவுலின் ஜெசிகாவின் “வாய்தா” மோஷன் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *‘வாய்தா’ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன் விஜய்சேதுபதி...!* கொரோனா லாக்டவுனால் திண்டாடிய திரையுலகம் தற்போது தான் மெல்ல தளைக்க ஆரம்பித்துள்ளது. இந்த சமயத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ளது “வாய்தா” திரைப்படம். அறிமுக இயக்குநர் மகிவர்மன் C.S. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் வாய்தா படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளி...
KS ரவிக்குமார் தயாரித்து நடிக்கும்  ‘கூகுள்  குட்டப்பன்”

KS ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் ‘கூகுள் குட்டப்பன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *தமிழில் ரீமேக் ஆகிறது 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்': கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்* சில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் கமல் நடித்த 'தெனாலி' படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' தமிழ் ரீமே...
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம்!

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம்! துல்கர் சல்மானின் 25-வது படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. புதுமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார். இந்நிலையில், இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் 2-வது ஹீரோயினாக நடித்த நிரஞ்சனியை திருமணம் செய்ய உள்ளாராம். இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். இது காதல் திருமணம் இல்லையாம், முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாம். இவர்கள் திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் 25-ந் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது. பின்னர் சினிமா பிரபலங்கள் கலந...
சூர்யாக்கு  எனது நன்றி – ரம்யா பாண்டியன்

சூர்யாக்கு  எனது நன்றி – ரம்யா பாண்டியன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யாக்கு  எனது நன்றி - ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற படத்தின் மூலம் பலரும் அறியும் நடிகையானார். எனினும், இந்தப் படங்களுக்குப் பிறகு நம்யா பாண்டியனுக்கு போதுமான வாய்ப்பு அமையவில்லை. எனினும், தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு வந்தார். தனது வீட்டு மொட்டை மாடியில் ரம்யா பாண்டியன் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன...
‘சில்லுக்கருப்பட்டி’ இயக்குனரின் புதிய படம் ‘ஏலே’ பிப்ரவரி 12 ரிலீஸ்!

‘சில்லுக்கருப்பட்டி’ இயக்குனரின் புதிய படம் ‘ஏலே’ பிப்ரவரி 12 ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலீதா ஷமீம் அடுத்ததாக இயக்கி உள்ள ஏலே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வா குவாட்டர் கட்டிங் மற்றும் விக்ரம் வேதா போன்ற படங்களை இயக்கிய புஷ்கர் காயத்ரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் ஹலீதா ஷமீம். இவர் ‘பூவரசம் பீபீ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் இவர் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி எனும் ஆந்தாலஜி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள படம் தான் ‘ஏலே’. சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை எஸ்.சசிகாந்துடன் இணைந்து புஷ்கர் காயத்ரியும் தயாரித்துள்ளனர். அவர்கள் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.  இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்!

நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம்! மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், கடந்த 1995-ம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அண்மையில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் பிரியதர்ஷினுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ...
அமேசான் ப்ரைமில் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது மாஸ்டர்

அமேசான் ப்ரைமில் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது மாஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமேசான் ப்ரைமில் வெளியாகிறது மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபடுத்தும் விஜய் சேதுபதியுடன் விஜய் மோதி, சிறுவர்களை மீட்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் படத்தை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியானது. கடந்த 9 மாதத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். இந்த படம் கடந்த 14 நாட்களில் சுமார் 72 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் தெரிவித்துள்ளது.படத்திற்கு முதலீடு செய்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பெற்றுள்ள ந...
லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரன் அல்லிராஜா வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” ! நடிகர் சிவர்கார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள உச்சகட்ட எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பாக, சிவகார்த்திகேயனின் 19 வது படமாக “டான்” படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார். லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார். லைகா குழும தலை...
சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக  நடிக்கும் அருண் விஜய்!

சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக  நடிக்கும் அருண் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக  நடிக்கும் அருண் விஜய்! நடிகர் விஜய்குமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜய் அவர்களின் மகனுமாகிய ஆர்ணவ் விஜய், பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், எனும் செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போதைய மிகப்பெரும் ஆச்சர்யம் யாதெனில், இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார் என்பது தான். இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது... இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் விளம்பரத்திற்காகவும், ஆர்ணவ் விஜய்க்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என  முதலிலேயே கூறிவிட்டார். நான் த...
S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனியின் நான் கடவுள் இல்லை!

S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனியின் நான் கடவுள் இல்லை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை” . இதில் சமுத்திரகனி CB CID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌனகுரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். ஓய்வு பெற்ற வழக்கறிஞராக S.A.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகார...