வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

அமேசான் ப்ரைமில் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது மாஸ்டர்

 

அமேசான் ப்ரைமில் வெளியாகிறது மாஸ்டர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபடுத்தும் விஜய் சேதுபதியுடன் விஜய் மோதி, சிறுவர்களை மீட்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் படத்தை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியானது. கடந்த 9 மாதத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். இந்த படம் கடந்த 14 நாட்களில் சுமார் 72 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் தெரிவித்துள்ளது.படத்திற்கு முதலீடு செய்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பெற்றுள்ள நிலையில் படம் வெளிநாடுகளில் வெளியாகாததால் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகிறது

267 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன