புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

நடிகை ரைசாவின் படுகவர்ச்சியான போட்டோஷூட்!

நடிகை ரைசாவின் படுகவர்ச்சியான போட்டோஷூட்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை ரைசாவின் படுகவர்ச்சியான போட்டோஷூட்! பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, 'மாடலிங்' துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார். போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது உள்ளாடை அணியாமல், சட்டை பட்டன் போடாமல், படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், இந்த சமயத்தில் இத்தகைய புகைப்படங்கள் தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்....
பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி!

பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனி! இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை சென்றார். அந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடிக்க வந்த புதிதிலிருந்தே, தனது பெயரை ஜனனி ஐயர் என்று தான் குறிப்பிட்டு வந்தார். சமூக வலைதளங்களிலும் அந்தப்பெயரையே பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், ‘மாற்றம் ஒன்றே மாறாதது, என்றும் ஒற்றுமையுடன்’ என குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் தனது பெயரிலிருந்த ஜாதி அடையாளத்தை நீக்கி உள்ளார் நடிகை ஜனனி. அவரின் இந்த மாற்றத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால் ஏன் இந்த திடீர் ஜாதி துறப்பு என்பதை நடிகை ஜனனி விளக்...
இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்!

இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் 3 ஹீரோயின்கள்! சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தற்போது சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு, அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் டி.முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிட்டார். இது அவர் இயக்கத்தில் உருவாகும் 10வது திரைப்படம் ஆகும். இந்நிலையில், அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வெங்கட் பிரபுவின் 10-வது படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு பிர...
சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
சன்னி லியோன் வீடருகே சொகுசு வீடு வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்! இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மும்பை ஜூகுவில் உள்ள ஜல்சா பங்களா வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அந்தேரி மேற்கு ஓஷிவாராவில் உள்ள அட்லாண்டிஸ் என்ற 34 சொகுசு அடுக்குமாடி கட்டிடத்தில் புதிதாக வீடு ஒன்று வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.31 கோடி ஆகும். இது 5 ஆயிரத்து 704 சதுர அடியில் இரண்டடுக்கு வகையை சேர்ந்த வீடு ஆகும். இதில் 6 வாகனங்களை நிறுத்த நவீன முறையில் வசதி உள்ளது. இதற்காக முத்திரைத்தாள் கட்டணமாக ரூ.62 லட்சத்தை அமிதாப் பச்சன் செலுத்தி உள்ளார். அவருக்கு ஏற்கனவே 4 பங்களா வீடுகள் இருக்கும் நிலையில், தற்போது 5-வதாக புதிய வீடு வாங்கி உள்ளார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்கனவே கவர்ச்சி நடிகை சன்னி லியோனும் ஒரு வீடு வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ !

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘எப்.ஐ.ஆர்’ ! தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘எப்.ஐ.ஆர்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட...
‘தளபதி 66’ படத்தை உறுதி செய்த பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி!

‘தளபதி 66’ படத்தை உறுதி செய்த பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
 ‘தளபதி 66’ படத்தை உறுதி செய்த பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி! நடிகர் விஜய், மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இயக்குனர் வம்சி பைடி பல்லி சமீபத்திய பேட்டியில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்...
என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து!

என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை... விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து! மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள...
விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்!

விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்! தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் விஷால் மீது பாலியல் புகார் கூறி இருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில், நான் சினிமா துறையில் பாலியல் வேட்டையாடுபவர்களையும் துன்புறுத்தல்களையும் முதலில் கண்டிப்பது விஷால். புதியதாக சினிமாவில் நுழையும் பெண்களுக்கும் முன்னணி நடிகைகளுக்கும் பாலியல் துன்புறுத்தலை கொடுத்திருக்கிறார். நீங்களும் உங்கள் நண்பர்களும் பலரை பயன் படுத்தி தூக்கி வீசி விட்டீர்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு பதிலாக வேறு வழியை கையாண்டு இருக்கிறீர்கள். உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையால் பல பெண்...
நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது- முன்னாள் அமைச்சர் மணிகண்டன்! நடிகை சாந்தினி கொடுத்த புகார் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் செல்போனில் பேசி நிருபர்கள் பேட்டி எடுத்தனர். மணிகண்டன் கூறியதாவது:- நடிகை சாந்தினி என்பவரை யார்? என்றே எனக்கு தெரியவில்லை. நான் அரசியல்வாதி. ராமநாதபுரம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக இருந்துள்ளேன். அப்போது எத்தனையோ பேர் என்னை சந்தித்தனர். அது போல சாந்தினியும் என்னை சந்தித்திருக்கலாம். அந்த புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். எனது அரசியல் எதிரிகள் பின்னணியில் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டிருக்கலாம். 3 நாட்களுக்கு முன்பு வக்கீல் ஒருவரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் என்னிடம் பேசினார்கள். சாந்தினியுடன் நீங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படம் எங்களிடம் உள்ளது. அதை வைத்து போ...
‘நவரசா’ வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்!

‘நவரசா’ வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘நவரசா’ வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்! தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த தொடரின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆந்தாலஜி தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக ...