ஏமாலி படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். Aமாலி படம் U சான்றிதழ் வாங்கி உள்ளது. விரைவில் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடக்கிறது.
https://youtu.be/Yv8t53muxDI
புவன் மீடியா வொர்க்ஸ்
பெருமையுடன் வழங்கும்
“சீமத்துரை”.
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”.
கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
"ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்.
அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு.
வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனி...
ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் "ஒரு கதை சொல்லட்டுமா".
கலை துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிக சிலரே. அந்த மிக சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் gv gv ரசூல் பூக்குட்டி. இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை . தற்பொழுதைய பரபரப்பு செய்தி, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருப்பது தான். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்த படத்தை 'Palm Stone Multimedia' ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறி...
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் '6 அத்தியாயம்'. பல குறும்படங்களை ஒன்றிணைத்து 'அந்தாலஜி' படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் ட்ரெண்டான ஹாரர் பாணியில் அமைந்திருப்பது படத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது. 'ஆஸ்கி மீடியா ஹட்' எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் ...
நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா, தனது கொள்ளு பேரன் மனுரஞ்சித் திருமணத்தை கோபாலபுரம் வீட்டில் இன்று நடத்தி வைத்தார் கருணாநிதி.
உடல் நல குறைவு காரணமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஓராண்டுக்கு பின் கடந்த சில தினங்களுக்கு முன்பு முரசொலி அலுவலகம் சென்று கண்காட்சியை பார்வையிட்டார்.
மு.க.முத்துவின் பேரனும்,தனது கொள்ளுப்பேரனுக்கும் நடிகர் விக்ரம் மகளுக்கும் இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி திருமணம் நடத்தி வைத்தார்.
மெதுவாக இயல்பு நிலைக்கு வரும் கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
...
விதி மதி உல்டா படத்தின் ஆடியோவெளியீடு நிகழ்ச்சி ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவின்யுவில் நடந்தது இந்தப் படத்தின் இசையமைப் பாளர் அஸ்வின் வினாயகமூர்த்தி இந்தப்படத்தின் பாடல்களை நேரடீ இசைநிகழ்ச்சியாக நடத்தி படத்தில் பாடிய பாடகர்களை வரவழைத்து மறுபடியும் பாடவைத்து அவரும்பாடி ஆடிவிழாவை சிறப்பாகநடத்தினார் . விழாவில் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகருமான ரமீஸ்ராஜா, நாயகிஜனனி ஐயர், டேனியல்பாலாஜி, சென்ராயன், ரெட்ஜெயன்ட் ராஜாசங்கர், பின்னணிபாடகர் சின்மயி, நடிகை சீதா,நடிகர் கலையரசன் , படத்தின் டைரக்டர் விஜய்பாலாஜி மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள். இந்தப்படத்தின் பாடல் காட்சிகள்YOUTUBE ல்வெளியிடப் பட்டிருந்தது அதை 35,00000 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது....
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க சமீபத்தில் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி வழங்கியது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தனது சொந்தப் பணத்தில் ரூ.10 லட்சத்தை நன்கொடையாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம...
படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாளிலிருந்தே 'சென்னை 2 சிங்கப்பூர்' படம் எல்லோரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது. ஜிப்ரானின் இசை இப்படத்தின் தூணாக இருக்கும் என கருதப்படுகிறது. அவரது இப்பட பாடல்கள் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இப்படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு கூறியுள்ளது.
புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்ட தினத்திலிருந்து சினிமா ரசிகர்களிடையே இந்த ட்ரைலர் அசத்தலான வரவேற்பை பெற்றுவருகிறது. மிக சுவாரஸ்யமாக, வித்யாசமாக இருக்கும் இந்த ட்ரைலரை ரசிகர்கள் மட்டுமின்றி வணிக தரப்பினரும் ரசித்து பாராட்டியுள்ளனர்.
''இந்த ட்ரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களது உழைப்பிற்கு கிடைத்துள்ள சன்மானமாகும். நான் எதிர்பா...