ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 26
Shadow

CINI NEWS

நடிகர் விக்ரம் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார் கருணாநிதி… தொண்டர்கள் உற்சாகம்..!

நடிகர் விக்ரம் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார் கருணாநிதி… தொண்டர்கள் உற்சாகம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உடல் நிலை, சிகிச்சை காரணமாக கடந்த கடந்த ஓராண்டாக   கருணாநிதி பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ம் தேதி முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்த வீடியோ திமுக சார்பில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தனது கொள்ளுபேரனுடன் கருணாநிதி சிரித்து விளையாடும் வீடியோவும் திமுக சார்பில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 1 ம் தேதி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரின் கொள்ளுபேரன் மனுரஞ்சித்தின் திருமண விழா நடக்க போகுது. அதாவது கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனுரஞ்சித்திற்கும், நடிகர் சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் போன ஜூலை 10 ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நவம்பர் 1 ம் தேதி நடக்கும் இவர்...
மெர்சல் விவகாரம் விஜய்க்கு  ஆதரவாக “அறம்” பட இயக்குனர் கோபி அறிக்கை

மெர்சல் விவகாரம் விஜய்க்கு ஆதரவாக “அறம்” பட இயக்குனர் கோபி அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  மெர்சல் பட விவகாரங்களில் ஏற்பட்ட சர்ச்சைகள் நேரத்தில் விஜய் ஜோசப் விஜய் என பி ஜே.பி கட்சியினரால் விமர்சிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் விஜய் வெளியிட்ட நன்றி அறிவிப்பில் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டிருந்தார். விஜய்க்கு ஆதரவாக பல நடிகர், நடிகைகள் அறிக்கை வெளியிட்டனர். நயன்தாரா நடிப்பில் அறம் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் கோபி விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், எனக்கு எந்த பெயர் வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் எந்தப் பெயரோடு நான் வெளிப்பட வேண்டும் என்பது எனது உரிமை . என் பெயருக்குப் பின்னால் இன்னொரு அடையாளம் இருப்பதாக ஒரு மதவாதி அடையாளப் படுத்தினால் என் அடிப்படை உரிமையை படுகொலை செய்யும் ஆள்காட்டி வேலையை செய்கிறது என்பது பொருள் விஜய் கிறித்துவராகோ , இஸ்லாமியராகவோ புத்திஸ்ட்டாகவோ சீக்கியராகவோ இருப்பது நடிகர் விஜய்யின் உரிமை இதனால் தான் ம...
அழியும் காடுகளைப் பற்றி பேசும் மரகதக்காடு..!

அழியும் காடுகளைப் பற்றி பேசும் மரகதக்காடு..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  தமிழக  சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை  'மரகதக்காடு 'படம் பெற்றுள்ளது   இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.   அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ  மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன்   மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் பேசும்போது, " அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும்  அநீதி ப...
நடிகர் ஆர்யா வெளியிட்ட சீமத்துரை போஸ்டர்..!

நடிகர் ஆர்யா வெளியிட்ட சீமத்துரை போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் “சீமத்துரை”. கீதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....
தஞ்சை மக்களின் மரியாதை,அன்பை சொல்லும் வீரையன்..!

தஞ்சை மக்களின் மரியாதை,அன்பை சொல்லும் வீரையன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஃபாரா சரா பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘வீரையன்’ 90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்“வீரையன்”. இப்படம் ஒரு பக்கம் தந்தை - மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பமாகும். ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும். சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் உருவாகி இருக்கிறது இப்படம். பொதுவாக கதாநாயகன், கதாநாயகி,வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பார்ப...
நெட்டில் திருட்டுத்தனமாக படம் பார்த்த விவகாரம்  எச்.ராஜாவுக்கு வெட்கமில்லையா  விஷால் ஆவேசம்..!

நெட்டில் திருட்டுத்தனமாக படம் பார்த்த விவகாரம் எச்.ராஜாவுக்கு வெட்கமில்லையா விஷால் ஆவேசம்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
நெட்டில் திருட்டுத்தனமாக படம் பார்த்த விவகாரம் எச்.ராஜாவுக்கு வெட்கமில்லையா விஷால் ஆவேசம்   ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை. எச். ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், ...
சமூக கருத்து சொல்ல எங்களுக்கும் அக்கறை உள்ளது – மெர்சல் விவகாரத்தில்   விஷால் கருத்து

சமூக கருத்து சொல்ல எங்களுக்கும் அக்கறை உள்ளது – மெர்சல் விவகாரத்தில் விஷால் கருத்து

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்! மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது? சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்க...
எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..!

எம்.ஜி.ஆரின் பேரன் ஹீரோவாக நடிக்கும் ‘வாட்ஸ் அப்’..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான். இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர 'அஞ்சல்' மோகன் - ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய் - ரக்ஷிதா, காதல் சுகுமார் - லாலித்தியா என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர். இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் JV இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்ட...
கவுதம் வாசுதேவமேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கோலி சோடா 2

கவுதம் வாசுதேவமேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் கோலி சோடா 2

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் 'கோலி சோடா 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இதில் ''ஸ்டைலிஷ் ' இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதே தற்போதய சுவாரஸ்யமான செய்தி. இது குறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில் , '' இந்த கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன். இது ஒரு கௌரவ கதாபாத்திரமாக இருந்தாலும் கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் கதாபாத்திரமாகும். இக்கதையையும் கதாபாத்திரத்தையும் கவுதம் வாசுதேவ மேனனிடம் நான் சொன்னபொழுது சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது நிஜ வாழ்க்கை இயல்பிற்கும் குணாதிசயங்களிற்கும் மிகவும் ஒத்துப்போகும் கதாபாத்திரம் இது என்பதாலேயே அவரை நான் அணுகினேன். அவர் நடிக்க ஒப்புக...
சட்டத்தை சாதகமாக்கி கல்லா கட்டும் உதயம் தியேட்டர்… கண்டு கொள்ளாத காவல்துறை..!

சட்டத்தை சாதகமாக்கி கல்லா கட்டும் உதயம் தியேட்டர்… கண்டு கொள்ளாத காவல்துறை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை! சினிமாவில் ஏற்கெனவே எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்கிறது.அத்தனையையும் தாண்டிதான் வாரா வார்ம் சில பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படி கோடி கணக்கில் உருவான பல படங்கள் வெளியாகி ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் லீக்-காகி வருமானத்தை கெடுத்து விடுகிறது. அத்துடன் பெரும்பாலான தியேட்டர்கள் அன்றாடம் வசூலாகும் தொகையை உண்மையான கணக்குடன் தயாரிப்பாளர்களிடம் சேர்க்கும் போகும் குறைந்து வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு சீனியர் புரொடியூசர், “இப்போ பார்த்தீங்கண்ணா டாப் ஹீரோக்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறி வாராங்க.. அதை கவனிச்சீங்களா?அதுக்குக் காரணம் இங்கே தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டே போவதுதான். இதே தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஏ.வி.எம்., சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படத் தயாரிப்புகளை வெகுவா...