சனிக்கிழமை, அக்டோபர் 3
Shadow

நடிகர் விக்ரம் மகள் திருமணத்தில் கலந்து கொள்கிறார் கருணாநிதி… தொண்டர்கள் உற்சாகம்..!

 

உடல் நிலை, சிகிச்சை காரணமாக கடந்த கடந்த ஓராண்டாக   கருணாநிதி பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ம் தேதி முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்த வீடியோ திமுக சார்பில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து தனது கொள்ளுபேரனுடன் கருணாநிதி சிரித்து விளையாடும் வீடியோவும் திமுக சார்பில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நவம்பர் 1 ம் தேதி கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரின் கொள்ளுபேரன் மனுரஞ்சித்தின் திருமண விழா நடக்க போகுது. அதாவது கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனுரஞ்சித்திற்கும், நடிகர் சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் போன ஜூலை 10 ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நவம்பர் 1 ம் தேதி நடக்கும் இவர்களின் திருமண விழாவில் கருணாநிதி பங்கேற்க உள்ளார். ஓராண்டிற்கு பிறகு கருணாநிதி கலந்து கொள்ளும் திருமண விழா இது என்பதால் உடன்பிறப்புகளின் உற்சாக பீட் இப்போதே எகிற ஆரம்பிச்சிடுச்சு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன