செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 18
Shadow

களத்தில் இறங்கிய கமல்ஹாசன் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி.. ரசிகர்கள் உற்சாகம்..!

ட்விட்டரில் மட்டுமே கருத்து சொல்லும் கமல் வெளியே வந்து பார்ப்பாரா என அரசியல் கட்சியினர் கமல்ஹாசனை விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாள் அன்று முக்கியமான அறிவிப்பு வெளியிடப் போவதாக கமல் ஹாசன் அறிவித்தார்.

இந்த சூழலில் திடீரென சென்னையின் பல பகுதிகளில் கமல் களத்தில் இறங்கி பார்வையிட்டார்.

இது அரசியல் கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரம் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். கமல்ஹாசன் களத்தில் இறங்கியது அரசியலுக்கான முன்னோட்டம். இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கமல்ஹாசன் பார்வையிட்டார்.

கொசஸ்தலை ஆற்றில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல்கழிவுகளை கொட்டுவதாக கமல் புகார்.

சென்னை எண்ணூர் பகுதி மக்களிடம் அங்குள்ள பிரச்னைகள் குறித்தும் கமல்ஹாசன் கேட்டறிந்தார்

ட்விட்டரில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்தநிலையில், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதில் கூறும் வகையில் முதன்முறையாக களத்தில் இறங்கினார் கமல்.

571 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன