திங்கட்கிழமை, அக்டோபர் 12
Shadow

CINI NEWS

சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்!

சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: 'ஜீப்ரா' பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்! ‘எண்ணிக்கையை விடத் தரமே முக்கியம்’ எனும் பாதையில், ரசிகர்களைக் கவரும் வகையில் வித்தியாசமான கதைக் களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சிபிராஜ். திரையரங்கம் மற்றும் ஓடிடி தளம் என அனைத்துத் தளங்களிலும் வெற்றிப் படங்களை வழங்கி வரும் அவர், தற்போது திரைத் துறையில் அடுத்த கட்டமாகத் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். தனது பிறந்தநாளான இன்று, "அண்டர்டாக் ஃபிலிம்ஸ்" (Underdog Films) எனும் புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'புரொடக்ஷன் நம்பர் 1' (Production No.1) திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பிளாக்பாஸ்ட...
‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது! தசரத மன்னராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டரை ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ராமர் கதாபாத்திரத்துடன் அடையாளம் காணப்படும் அருண் கோவிலுக்கு இது முக்கியமான புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ராமரின் தந்தையும் அயோத்தி மன்னருமான தசரதராக அருண் கோவில் காட்சியளிக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது. முன்பு, இந்திய ரசிகர்களால் ராமராகப் போற்றப்பட்ட அருண் கோவில், தற்போது அயோத்தியின் மன்னரும் ராமரின் தந்தையுமான தசரதராக ‘ராமாயணா’ திரைப்படத்தில் நடிக்கிறார். ராமாயண...
’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு! ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் படம் வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், "இந்த படம் சிறந்த அனுபவமாக மாற்றி கொடுத்த ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி". ஷபிதா, "கடந்த 16 வருடங்களாக திருநங்கை மற்றும் திருநர் சமூகத்திற்காக வேலை பார்த்து வருகிறோம். நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், நிறைய படங்கள் வந்திருந்தாலும் 'டோரதி' எப்போதுமே ஸ்பெஷல். படம் பார்த்து முடித்ததும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட...
‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்!

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய நடிகர் வித்யுத் ஜம்வால்! மும்பையில் நடைபெற்ற ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் நடிகர் வித்யுத் ஜம்வால் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வித்யுத் ஜம்வால். கேமிங் கதாபாத்திரமான தால்சிமின் வல்லமை யோகா மற்றும் இந்தியாவின் பழமையான தற்காப்புக் கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த சிறப்பு நிகழ்வில், தால்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்து வித்யுத் ஜம்வால் பகிர்ந்து கொண்டதுடன், யோகி கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஏன் மிகச் சரியான தேர்வு என்பதையும் அனைவருக்கும் நிரூபித்தார். தால்சிம் வேடமிட்ட காஸ்பிளேயர்ஸூடன் மேடையில் ...
“சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா!

“சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை”-நடிகை ஃபரியா அப்துல்லா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  "சிக்மா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானது எனக்கு பெருமை"-நடிகை ஃபரியா அப்துல்லா! லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் ' வெளியான 'சிக்மா' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களிடையே கிடைத்து வரும் நேர்மறையான வாய் வழிப் பாராட்டுகளால், படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் ஹெய்ஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் படமாக உருவாகியுள்ள 'சிக்மா' மூலம் நடிகை ஃபரியா அப்துல்லா தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். படத்தின் வெற்றி அவரது அறிமுகத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியுள்ளதுஇந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா மற்றும் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் என இளம் திறமையாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். ஃபரியாவைப் பொறுத்தவரை, ‘சிக்மா' திரைப்படம் ...
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜூனின் புதிய அலுவலகம் ‘ICONZA’!

ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜூனின் புதிய அலுவலகம் ‘ICONZA’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    தனது தாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளில் புதிய அலுவலகம் திறந்த அல்லு அர்ஜூன்! மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் 'ICONZA' என்ற தனது புதிய அலுவலகத்தை திறந்தார். எளிமையாக நடைபெற்ற தொடக்க விழா பூஜையில் அல்லு அர்ஜூன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பான நாளின் புகைப்படங்களைப் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் நிலைத்திருக்கும் கலைப் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிப்பாக இந்த புதிய அலுவலகம் செயல்படும் என்றார். இந்திய சினிமாவின் முன்னோடியாகப் போற்றப்படும் அல்லு ராமலிங்கய்யா அவர்களின் புகழ்பெற்ற திரைப்பயணம் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் உள்ளடக்கியது. தனது தாத்தாவின் பிறந்தநாளில் இந்த புதிய பயணத்தைத் தொடங்கும் அல...
‘மிஸ்டர் பாரத்’  ரிலீஸ் தள்ளிப்போனதற்கு இதுதான் காரணமாம்..!

‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தள்ளிப்போனதற்கு இதுதான் காரணமாம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் நகைச்சுவை எண்டர்டெயின்மெண்ட் ஜானரில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் எதிர்பார்ப்புக்குரிய பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் உரிய இடமும் கவனமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி விரைவில் அற...
‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு..!

‘த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'த்ரிஷ்யம் 3’ இந்தி பதிப்பை உலகளவில் வெளியிடுவதற்குத் தடை கோரி ராஜ்குமார் தியேட்டர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது எதிர்மனுதாரர்களின் பதில் மற்றும் வழக்கின் விசாரணைக்காக அக்டோபர் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மலையாளத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி மொழி ரீமேக் மற்றும் அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தங்களது உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. விசாரணை நடைபெற்று முடியும் வரை, ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி பதிப்பை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடுதல...
ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்!

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஃபஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' (Don't Trouble The Trouble' ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) - ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் - அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி (sakthi film factory) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான  பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்....
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்! சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இந்திய சினிமாவில் புதியதொரு மைல்கல்லை உருவாக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான சஞ்சய் லீலா பன்சாலி படைப்பு, ரசிகர்களுக்கு இதுவரை காணாத ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு ரசிக...