வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31
Shadow

CINI NEWS

நாகேஷ் திரையரங்கம் பட தயாரிப்பாளர் விளக்கம் தர  சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ..!

நாகேஷ் திரையரங்கம் பட தயாரிப்பாளர் விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ..!

CINI NEWS, NEWS, செய்திகள்
நாகேஷ்திரையரங்கம் படத்தை வெளியிட தடைகேட்டு,மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்போட்டுள்ளார்..சமீபத்தில் நாகேஷ்திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்..நடிகர் ஆரி, ஆஷ்னாசவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர. எம் ராஜன் தயாரித்துள்ளார். மேலும் ஆனந்த்பாபு  இப்படத்தை வெளியிட நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறிவருவதாக சொல்லப்படுகிறது..ஆனந்த்பாபு அனுப்பியுள்ள மனுவிற்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.....
பெப்சி தலைவர் பதவியை இழக்கிறார் ஆர் கே செல்வமணி..!  – கோடங்கி

பெப்சி தலைவர் பதவியை இழக்கிறார் ஆர் கே செல்வமணி..! – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
தமிழ் திரையுலகில்  ஒவ்வொரு சங்கத்திலும் ஏதாவது ஒரு சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். இந்த விவகாரம் கொஞ்சம் வித்தியாசமானது... தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்த நிலையில் சங்கத்தின் பெயர் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அதே பெயரை பரமகுடியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் விண்ணப்பித்து பெற்றார். இதன் காரணமாக ஏற்கனவே இயக்குனர் விக்ரமன் தலைவராகவும், R.K.செல்வமணி செயலாளராக இருந்த இயக்குனர் சங்கம் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்கு ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சினிமா தொழிலாளர் சம்மேளனமான பெப்சி அமைப்பின் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ரத்தான இயக்குனர் சங்கத்தின் சார்பில் பெப்சி தலைவர் பதவிக்கு R.K.செல்வமணி போட்டியிட்டார். அப்போது அந்த வேட்புமனுவை ஏற்க கூடாது ரத்து செய்யப்பட்ட சங்கத்தில் ...
பிரபு தேவா – ஹன்சிகா மோத்வானி நடிக்கும்  “குலேபகாவலி”

பிரபு தேவா – ஹன்சிகா மோத்வானி நடிக்கும் “குலேபகாவலி”

CINI NEWS, செய்திகள்
K.J.R  ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் “குலேபகாவலி”. பிரபு தேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல் காட்சி 2 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக கலை இயக்குனர் கதிர் அரங்க அமைக்க அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஒளிப்பதிவாளர் ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் அவர்களின் இசையில் உருவான இந்த பாடல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானி அவர்களின் நடனம், படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி அவர்களின் படத்தொகுப்பு, ஹாலிவுட் கிராபிக்ஸ் கலைஞர்களின் முன்னிலை என பிரமாண்டமான முறையில் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இத்தனை பொருட்செலவில் பரபரப்பாக தயாராகிவரும் இப்படத்தை K.J.R ராஜேஷ் தயாரித்து வருகிறார்....
ஜி.எஸ்.டி. வரி மத்திய அமைச்சருக்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்..!

ஜி.எஸ்.டி. வரி மத்திய அமைச்சருக்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்..!

CINI NEWS, செய்திகள்
தமிழ் , தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து தயாரிப்பாளர் சங்கமும் இனைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றை வருகிற வெள்ளிகிழமை வைக்கவுள்ளது. GST அமலுக்கு பிறகு ரூபாய் 100 க்கு கீழ் டிக்கெட் வசூலிக்கும் திரையரகுகள் 18% வரியும் , ரூபாய் 100 க்கு மேல் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 28% வரியும் கட்ட வேண்டி இருக்கும். வருகிற சனிக்கிழமை முதல் GST அமலாகவுள்ள இந்நிலையில் அனைத்து தயாரிப்பாளர் சங்கமும் இனைந்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது அதன் படி. பிராந்திய மொழி படங்களுக்கு வரிவிலக்கு அளித்தும் , பிற மொழி படங்களுக்கு குறைந்த அளவு வரி விதிக்க வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை. வெளிநாட்டு படங்களுக்கு அதிக வரி விதிக்கலாம். GST தற்போது உள்ள லட்சக்கணக்கான மிகச்சிறந்த சினிமா துறையினரை பாதிக்கும் என்கிறது தயாரிப்பாளர் சங்கம். தயாரிப்பாளர் ச...
கதாநாயகி , பாடலாசிரியர் ஆன “பண்டிகை” தயாரிப்பாளர் விஜயலட்சுமி..!

கதாநாயகி , பாடலாசிரியர் ஆன “பண்டிகை” தயாரிப்பாளர் விஜயலட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS
  டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்‌ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தை பற்றிய அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பருத்தி வீரனுக்கு பிறகு நல்ல படம் அமைந்தால் நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன். அதனாலேயே ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஃபெரோஸ் சொன்ன கதை பிடித்து போய் இந்தப் படத்தில் நடித்தேன். மிகவும் நேர்த்தியாக படத்தை உருவாக்கியிருக்கிறார். நல்ல இயக்குனராக வருவதற்கான அத்தனை தகுதியையும் அவரிடம் ஆரம்பத்திலேயே பார்த்தேன். பெரிய இயக்குனராக வருவார் என்றார் நடிகர் சரவணன். அங்காடி தெரு படத்த...
பலூனில் வந்த கேக்… அஞ்சலி தந்த இன்ப அதிர்ச்சியில் ஷாக் ஆன ஜெய்..!

பலூனில் வந்த கேக்… அஞ்சலி தந்த இன்ப அதிர்ச்சியில் ஷாக் ஆன ஜெய்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS
ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி – அவரின் பிறந்த நாளுக்காக ‘பலூன்’ இல் பறந்து வந்த கேக்… ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம் கொண்டவர், கார் பந்தய வீரரும், நடிகருமான ஜெய். இவர் தற்போது அஞ்சலி – ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார். சினிஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை, ’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பலூன் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ‘...
விஜய சேதுபதி தரும் கவுரவம்…

விஜய சேதுபதி தரும் கவுரவம்…

CINI NEWS, NEWS
“சினிமா என் குடுமபம் என்றால், திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என் குடும்பத்தினர்” என்று கூறுகிறர் விஜய் சேதுபதி சினிமாவின் ஆரம்ப நாட்களில் இருந்து இன்று வரை அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்து வருபவர்கள் திரையுலக பிண்ணனி கலைஞர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் அத்தகைய பல திறமையான பல திரையுலக பிண்ணனி கலைஞர்கள் இன்று திரையுலகில் இருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டனர். அதற்கு முக்கியமான காரணம், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில் நுட்பம். தமிழ் திரையுலகின் அப்படிப்பட்ட மூத்த திரையுலக பிண்ணனி கலைஞர்களை கௌரவ படுத்த, வருகின்ற மே 1 ஆம் தேதி அன்று பிரம்மாண்ட விழாவை ‘உலகாயுதா’ நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கிறார் இயக்குநர் எஸ் பி ஜனநாதன். தமிழ் திரையுலகின் 100 மூத்த கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் என மொத்தம் நூறு சவரன் தங்க பதக்கங்கங்களின் செலவை முழுவதுமாக ஏற்று வழங்க இருப்பவர் விஜய் சே...