வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

MOVIES

உக்ரைன் போர் நிமிதமாக சிறிது நேரம் பிராத்தனை செய்தார் நடிகர் சூர்யா!

உக்ரைன் போர் நிமிதமாக சிறிது நேரம் பிராத்தனை செய்தார் நடிகர் சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சூரி, வினய் ராய், இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யா “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்து என்னுடைய படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. நாம கொண்டாடிகிட்டு இருக்குற ...
மாஸ் காட்டும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டிரைலர் !

மாஸ் காட்டும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் டிரைலர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். https://youtu.be/cKrz-kWoaSI...
டான் ரிலீஸ் தேதி மாற்றம்!

டான் ரிலீஸ் தேதி மாற்றம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தனர்.   சமீபத்தில் டான் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்திகேயன் அறிவித்திருந்தார். மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த ரிலீஸ் தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்...
செல்ஃபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செல்ஃபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘செல்ஃபி’ படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்....
பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தின் முக்கிய அறிவிப்பு!

பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தின் முக்கிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். அந்தகன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தநிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை (02.03.2022)...
அஜீத்தின் வலிமை படத்தில் வக்கீல்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

அஜீத்தின் வலிமை படத்தில் வக்கீல்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்திய அத்திரைப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சாந்தி, தான் கடந்த 25 ஆம் தேதி வலிமை திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று கண்டதாகவும், அப்போது அத்திரைப்படத்தின் தொடக்கக் கா...
ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்!

ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் அக்டோபர் 23-ந் தேதி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று காலை வெளியானது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய டிரைலரை மார்ச் 2ஆம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது....
யானை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யானை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இயக்கி வரும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கிராமத்து பின்னணியில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தை மே 6 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
விஜய் – ரஜினி பட முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த அஜீத்தின் வலிமை வசூல்!

விஜய் – ரஜினி பட முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த அஜீத்தின் வலிமை வசூல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜித்தின் வலிமை திரைப்படம் முதல் நாளில் 35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விடுமுறை அல்லாத நாளில் வெளியாகி அதிக வசூலை குவித்த திரைப்படம் என்னும் சாதனையையும் வலிமை படைத்துள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வலிமை திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 1000 திரைகளில் வெளிவந்துள்ள இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்று அசத்தியுள்ளது. இந்திய அளவில் முதல் நாளில் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் வலிமை திரைப்படம் தமிழகத்தில் 28 கோடி ருபாய் வரை வசூல் செய்துள்ளதன் மூலம் விஜயின் சர்க்கார் படத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. மேலும் விடுமுறை இல்லாத நாளில் வெளிவந்து அதி...
சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் !

சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், திரைப்படங்கள்
  சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் ! சிவகார்த்திகேயன் உடைய Sivakarthikeyan Productions நிறுவனத்தின் சார்பில் முதல் தயாரிப்பாக உருவான படம் “கனா”. இப்படம் தற்போது சீனாவில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில், சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகிறது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் முதன்மை பாத்திரங்களிலும் சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும் நடித்திருந்த “கனா” திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒருமித்த பாரட்டுக்களை பெற்று, பிரமாண்ட வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக சாதனை படைத்த இப்படம் மொழிகள் தாண்டியும் பாராட்டு பெற்றது. இப்படம் வெளியான 2018 ஆம் வருடத்தில் பல விருதுகளையும் வென்றது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது இப்படம் சீனாவில் வரும் மார்ச் 18 ஆம் தேதி மிகப்பெரும் எண்ணிக்கையிலான ...