முழுமையான காதல் படமாம் “பார்த்திபன் காதல்” சொல்கிறார் இயக்குனர் வள்ளிமுத்து..!
எஸ் சினிமா கம்பெனி என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ பார்த்திபன் காதல் “
இந்த படத்தில் யோகி கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வர்ஷிதா அறிமுகமாகிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
படம் பற்றி இயக்குனர் வள்ளிமுத்து..
உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதிய களத்தில் இளமை கொஞ்சும் காதல் கதையாக உருவாக இருக்கிறது. அறிமுக நாயகன் யோகி ஓவிய கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இளம் கதாநாயகி வர்ஷிதா கிராமத்து கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.
சமீப கலாமாக தமிழ் சினிமாவில் காமெடிப்பேய் படங்களும், ஆக்ஷன் படங்களும் வந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் “ பார்த்திபன் காதல் “ ஒரு முழுமையான காதல் கதையாக உருவாகிறது.
கும்பகோணம், ராஜபாளையம், தென்காசி போன்ற இடங்களில் விரைவில் படபிடிப்பு நடக்க இருக்கிறது என்றார் இயக்குனர் வள்ளிமுத்து.
...









