மருத்துவமனையில் கமல்… விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்!
மருத்துவமனையில் கமல்... விக்ரம் படப்பிடிப்பில் மாற்றம்!
கமல்ஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பிலும், பிக்பாஸ் படப்பிடிப்பிலும் மாறி மாறி பங்கேற்று வந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் படப்பிடிப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் விக்ரம் பட வேலைகள் தாமதமாகி உள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் சார்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்தபடியே கமல்ஹாசன் பேசிய காட்சிகளை திரையில் ஒளிபரப்பினர். அதில், ‘‘கொரோனா தடுப்பூசி போட்டதால் எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா அச்சம் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
விக்ரம் படத்தில் கமல்ஹாசனும், வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதியும் நடிக்கும் சண்டை காட்சியை படமாக்க பொள்ளாச்சியில் அரங்கு...









