நடிகைகள் போதை பொருள் வழக்குகளில் கைதாகி வரும் நிலையில் தாதா87 விஜய்ஸ்ரீஜியின் “பவுடர்” சர்ச்சையை கிளப்புமா?!
நடிகைகள் போதை பொருள் பயன்படுத்திய வழக்குகளில் கைதாகி வரும் நிலையில் தாதா87 இயக்குனரின் அடுத்த திகில் த்ரில்லர் படமாக உருவாகும் "பவுடர்"
தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் 'பவுடர்'
சாருஹாசன் நடித்த 'தாதா 87' வெற்றிப் படத்தை தந்த இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, தற்போது ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன், அர்ஜூமன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அனித்ரா நாயர்,ஆராத்யா, சாந்தினி, சான்ட்ரியா,மொட்டை ராஜேந்திரன்,மைம் கோபி ஆகியோரும் நடிக்கின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது பவுடர் என்ற புதிய படத்தை இன்று துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.
வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி ,ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகிய...









