புதன்கிழமை, ஜூன் 3
Shadow

MOVIES

ஃபைட் கிளப் 3 நாளில் இத்தனை கோடி வசூலா?

ஃபைட் கிளப் 3 நாளில் இத்தனை கோடி வசூலா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், பைட் கிளப் படம் வெளியான மூன்று நாட்களில் ரூ. 5 கோடியே 25 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதாகவும் இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது....
துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் ‘டங்கி’ படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வு!

துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் ‘டங்கி’ படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
துபாயில் உள்ள குளோபல் வில்லேஜில் 'டங்கி' படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வு தொடங்கியது. ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'டங்கி', இந்த வாரத்தில் வெளியாகவிருப்பதால், சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் அதனை விளம்பரப்படுத்தும் பயணத்தை முழு வீச்சில் தொடங்கியுள்ளார். பார்வையாளர்களின் உற்சாகம் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில்.. SRK தன்னுடைய ரசிகர்கள் மீதான அன்பை உலகம் முழுவதும் பரப்புவதன் மூலம் அதனை மேலும் உயர்த்தி இருக்கிறார். ரசிகர்களை சந்திப்பதற்கான எந்த வாய்ப்பையும் அவர் தவற விடவில்லை. துபாயிலிருந்து 'டங்கி' படத்திற்கான விளம்பரப்படுத்தும் பயணத்தை தொடங்கி, குளோபல் வில்லேஜில் அவர் நுழையும் போது பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 'டங்கி டே 1' என குறிப்பிடப்படும் இந்த விளம்பரப்படுத்தப்பட்ட பயணத்தில் SRKவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷாருக்கான் அண்மையி...
வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா

வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்திரா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக்கும் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு "இந்திரா" என்று பெயரிட்டுள்ளனர். நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார். வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது இப்படத்திற்கு இந்திரா ...
சலார்’ பட டிரைலர் வெளியானது..!

சலார்’ பட டிரைலர் வெளியானது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *பிரபாஸை பிரம்மாண்ட முறையில் காட்சிப்படுத்தும் 'சலார்' பட டிரைலர் வெளியானது..!* 'கே ஜி எஃப் சீரிஸ்' போன்ற பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சலார்' படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை தனித்துவமான பாணியில் வெளியிட்டு, வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கி உள்ளது. இந்த முன்னோட்டம்- அடக்க இயலாத பிரபாஸுடன் தொடங்குகிறது. இத்தகைய காட்சிகளில் வழங்கப்படும் மயக்கும் அழகியல் காட்சிகள் மற்றும் துடிப்பான சண்டை காட்சிகள் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.‌ இந்தியா முழுவதும் 5000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'சலார்'- ஒரு சினிமா கொண்டாட்டமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. மேலும் சமீபத்திய ட்ரெய்லரில் கான்சார் எனப்படும் உலகத்தையும், பிருத்விராஜ் மற்றும் பிரபாஸ் என்ற இரு நண்பர்களின் புதிர...
வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்* இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ் ஆகியோர் ’வணங்கான்’ படத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து அடுத்த கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அண்மையில் படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் விநாயகர் சிலையும் இன்னொரு கடவுள் இல்லை என சொன்ன பெரியார் சிலையும் வைத்தபடி உடல் முழுக்க சகதியுடன் மேலே பார்த்தபடி இருக்கும் அருண் விஜய் இந்த போஸ்டரில் இருந்தார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இயக்குர் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இந்நிலையில், வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வௌியாகி உள்ளன...
இயக்குனருக்கு தங்கப் பரிசு கொடுத்த  ஹீரோ “பார்க்கிங்” சக்சஸ் விழா

இயக்குனருக்கு தங்கப் பரிசு கொடுத்த ஹீரோ “பார்க்கிங்” சக்சஸ் விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்!* ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது. நிகழ்வில் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் ஷேர் அலி பேசியதாவது, “படத்தை மிகப்பெரிய வெற்றியாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம்குமார், தயாரிப்பாளருக்கு நன்றி. ஒத்துழைப்புக் கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. உங்களால்தான் என்னால் நன்றாக பணி செய்ய முடிந்தது. ‘பார்க்கிங்’ போல எங்களது அடுத்தடுத்தப் படங்களையும் வெற்றி பெற வையுங்கள்”. நடிகர் சுரேஷ் பே...
ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’

ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ‘கூச முனிசாமி வீரப்பன்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !! 'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும்.  தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் .. ZEE5 சார்பில் ஷ்யாம் திருமலை பேசியதாவது.. 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிறப்பான சீரிஸுடன் வந்துள்ளது ZEE5. நிறைய பேர் பாஸிடிவ் ரிவ்யூ தந்திருக்கிறீர்கள். பி...
பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்…

பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 5 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, TV news, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 05, 2024 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”. இந்த சீரிஸ் வரும் 2024 ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது “பேரில்லூர் பிரீமியர் லீக்”. நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள்...
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் “டங்கி” படத்தை வெளியிடும் “ஸ்ரீ கோகுலம் மூவிஸ்”!

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் “டங்கி” படத்தை வெளியிடும் “ஸ்ரீ கோகுலம் மூவிஸ்”!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான, விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளது !! 'ஜவான்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம் மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி, இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இப்படம் டிசம்பர் 21 முதல், திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 'டங்கி' படத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது. கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில் பெரும...
“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை. பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக...