வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

MOVIES

மகனின் புதுப்பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பிரேமலதா விஜயகாந்த்!

மகனின் புதுப்பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பிரேமலதா விஜயகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், புதுமையான ஆக்சன் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது !! Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்” மற்றும் "ரேக்ளா" பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும...
அஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற சக்கரவியூகம் – 3/5

அஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற சக்கரவியூகம் – 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூகம்" திரைப்படம் சேத்குரி மதுசூதன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் படம் "சக்ரவியூகம்". கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி ஸ்ரீ(ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்)...
வித்தியாசமாக நடைபெற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ இசை வெளியீட்டு விழா!

வித்தியாசமாக நடைபெற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ இசை வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வித்தியாசமாக நடைபெற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ இசை வெளியீட்டு விழா! மறக்குமா நெஞ்சம் திரைப்படம் பள்ளி கால நினைவுகளை ஏற்படுத்தி, மனதை வருடும் கதைக்களம் கொண்டு படமாக்கப்பட்டு இருக்கிறது. இரா. கோ. யோகேந்திரன் இயக்கியிருக்கும் மறக்குமா நெஞ்சம் படத்தில் ரக்‌ஷன் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவருடன் மலினா, தீனா மற்றும் பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கோபி துரைசாமி, இசை சச்சின் வாரியர், படத்தொகுப்பு சஷாந்த் மளி, கலை பிரேம் கருத்தமலை, பாடல்களை தாமரை எழுதியிருக்கிறார். இப்படத்தை ஜனார்தன் சவுத்ரி, ரமேஷ் பஞ்சக்னுலா, ரகு எல்லுரு மற்றும் இரா.கோ. யேகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா - இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றுள்ளது. மறக்குமா நெஞ்சம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தி...
தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர்

தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மகத்தான கிரிக்கெட் வீரரான தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கும் மாபெரும் கிரிக்கெட் வீரரான தல தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை திரை பிரபலங்கள், ஊடக, பத்திரிக்கை, இணைய நிருபர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்...
நான் செல்லும் இடமெல்லாம் சிஎஸ்கே-வின் அன்பு என்னை தொடர்கிறது – தோனி வெளியிட்ட LGM ரகசியம்

நான் செல்லும் இடமெல்லாம் சிஎஸ்கே-வின் அன்பு என்னை தொடர்கிறது – தோனி வெளியிட்ட LGM ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கும் மாபெரும் கிரிக்கெட் வீரரான தல தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை திரை பிரபலங்கள், ஊடக, பத்திரிக்கை, இணைய நிருபர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். LGM திரைப்படம் காமெடிக் காட...
ஷாருக்கானின் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது

ஷாருக்கானின் அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த ப்ரிவ்யூ காட்சி, படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்குத் எடுத்து சென்றுள்ளது. பார்வையாளர்களை வசீகரித்துள்ள இந்த ப்ரிவ்யூ ஒரு அசாதாரண சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகளின் சரியான கலவையை ஒன்றிணைத்துள்ள, ஜவான் ப்ரிவ்யூ பிரமிக்க வைக்கும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது. ப்ரிவ்யூ உடைய ஒவ்வொரு ஃபிரேமும் கவனத்தை ஈர்ப்பதுடன் ஜவான் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. ப்ரிவ்யூ கிங் கானின் குரலில் தொடங்குகிறது, அடுத்து என்ன எனும் ஆர்வத்தை உருவாக்குகிறது. ரசிகர்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த சிறப்பம்சம் என்னவென்றால், அவர்கள் இதுவரை பார்த்திராத அவதாரங்களில் SRK-ன் பல்வேறு தோற்றங...
இலங்கை இனப்படுகொலையை அம்பலப்படுத்தும்  “பேர்ல் இன் தி பிளட்’

இலங்கை இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் “பேர்ல் இன் தி பிளட்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இலங்கையில் நடந்த இன படுகொலை என்பது நீதிபதியும், நீதியும் இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு! - ‘பேர்ல் இன் தி பிளட்’ (PEARL IN THE BLOOD) இயக்குநர் கென் கந்தையா ஆதங்கம்! இலங்கையில் ஈழத் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், அவர்களின் வலிகளையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் ஓரளவே வெற்றி பெற முடிகிறது.காரணம், பல்வேறு கட்டுப்பாடுகளால் அம்மக்களின் வலிகளை முழுமையாக இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் அப்படிப்பட்ட படங்களை வெளியிடுவதற்கே பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு நிலையில், ஈழத்தில் நடந்த இன அழிப்பின் பின்னணியை கதைக்களமாக கொண்டு, உலகளவில் நடக்கும் இன அழிப்பு சம்பவங்களை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இயக்குநர் கென் கந்தையா இயக்கியிருக்கும் படம் தான் ‘பேர்ல் இ...
ரவி தேஜா, எஸ். தமன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய திரைப்படம்

ரவி தேஜா, எஸ். தமன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய திரைப்படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாஸ் மஹாராஜா ரவி தேஜா, கோபிசந்த் மலினேனி, எஸ். தமன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய திரைப்படம் #RT4GM !! தெலுங்கு திரையுலகில்  மாஸ் மஹாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனியின் கூட்டணி தொடர்ச்சியாக  ஹாட்ரிக் வெற்றிகளைக் குவித்துள்ளது.  திரைத்துறையில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் இக்கூட்டணியும் ஒன்றாகும். இந்த வெற்றிக்கூட்டணி நான்காவது முறையாக இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.  டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி  மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் #RT4GM படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கோபிசந்த் மலினேனியின் முந்தைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களான கிராக் மற்றும் வீர சிம்ஹா ரெட்டியைப் போலவே, உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு தனித்துவமான  கதையை ...
லைக்காவுடன் கரம் கோர்க்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்

லைக்காவுடன் கரம் கோர்க்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  *லைக்கா புரொடக்ஷன்ஸுடன் இணையும் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்* *லைக்காவுடன் கரம் கோர்க்கும் ஜூட் ஆண்டனி ஜோசப்* தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன்- பிரம்மாண்டமான பொருட்செலவில் தரமான படைப்புகளை உருவாக்கி, திரை ஆர்வலர்களுக்கும், வெகுஜன மக்களுக்கும் தனித்துவமான திரை அனுபவத்தை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறார். இதன் காரணமாகவே இவருடைய தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்- இந்திய திரையுலகில் பிரபலமான முன்னணி வணிக முத்திரையுடன் வலம் வருகிறது. நட்சத்திர நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படைப்புகளை உருவாக்குவதுடன் மட்டுமல்லாமல், புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதிலும் இந்நிறுவனம் முன்னணி வகிக்கிறது. இந்நிலையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், மலையாளத்த...
சலார் 1 சீஸ் ஃபயர் படத்தின் டீசரை ரிலீஸ்

சலார் 1 சீஸ் ஃபயர் படத்தின் டீசரை ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *ஹோம்பாலே ஃபிலிம்ஸ்- பிரசாந்த் நீலின் பிரபஞ்ச காவிய படைப்பான சலார் 1 : சீஸ் ஃபயர் படத்தின் டீசரை வெளியிட்டது.* *சலார் 1 : சீஸ் ஃபயர் டீசர்: ஹோம்பாலே ஃபிலிம்ஸின் இந்திய திரைப்படத்தில் பிரபாஸுடன் ஒரு மறக்க இயலாத சாகச பயணத்திற்கு தயாராகுங்கள்..!* *ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'இந்தியன் ஃபிலிம்' சலார் பகுதி ஒன்று : சீஸ் ஃபயர் டீசரை வெளியிட்டது: பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ஆகியோருடன் இணைந்து ஒரு காவிய பயணத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.* நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய 'இந்தியன் ஃபிலிம்' சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் அதிகாலை 5 12 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை படக்குழுவினர் தூண்டினர். ம...