எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா… – விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்திற்கு கனா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நடிகர் விஜய், அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விஜய் வாழத்துக்கு நன்றி தெரிவித்து அருண்ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
'என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்த்தேன். உங்களது இந்த ஊக்கமான வார்த்தைகள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக ...









