புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்!

படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்! ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன. மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர். அப்போது அவருக்கு எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது‌. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்....
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’. சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்து உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்....
அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்!

அம்மன் வேடத்தில் தமன்னா…. வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
அம்மன் வேடத்தில் தமன்னா.... வைரலாகும் புகைப்படம்! நடிகைகள் அம்மன் வேடங்களில் நடித்த பக்தி படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பழம்பெரும் கதாநாயகிகள் பலர் அம்மனாக நடித்து இருக்கிறார்கள். கடந்த வருடம் வெளியான மூக்குத்தி அம்மன் பக்தி படத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தற்போது அம்மன் வேடமிட்டு தலை வாழை இலையில் உணவு சாப்பிடும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘‘வாழை இலையில் உணவு சாப்பிடும்போது என்னை கடவுளாக உணர்கிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். தமன்னாவின் அம்மன் வேட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் உங்களுக்கு அம்மன் வேடம் கச்சிதமாக உள்ளது. புதிய படத்தில் அம்மனாக நட...
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!

விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்! தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்தது. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஊடகத்தில் பார்த்திபன் பேசும்போது, எனக்கு விஜய்க்கு கதை சொல்லி அவரை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதுவும் விரைவில் நடக்கும் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
மாநாடு சிக்கல் தீர்ந்தது …ரிலீசுக்கு  தயார்!

மாநாடு சிக்கல் தீர்ந்தது …ரிலீசுக்கு தயார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு சிக்கல் தீர்ந்தது ...ரிலீசுக்கு தயார்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (நாளை) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரி...
சந்தானத்தின் “சபாபதி” கிளப்பும் சர்ச்சை?! – கோடங்கி விமர்சனம்

சந்தானத்தின் “சபாபதி” கிளப்பும் சர்ச்சை?! – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, திரைப்படங்கள், விமர்சனம்
  சந்தானத்தின் "சபாபதி" கிளப்பும் சர்ச்சை?! - கோடங்கி விமர்சனம்   https://youtu.be/eYs92iVSn58
எப்பவும் பார்க்குற சிம்புவ இதில் பார்க்க முடியாது – யுவன்!

எப்பவும் பார்க்குற சிம்புவ இதில் பார்க்க முடியாது – யுவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எப்பவும் பார்க்குற சிம்புவ இதில் பார்க்க முடியாது - யுவன்! சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதில் யுவன் பேசும்போது, ‘எப்பவும் பார்க்குற சிம்புவ இப்படத்தில் பார்க்க முடியாது. வேறொரு சிம்புவை பார்க்கலாம். எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிம்புவுக்கு நடக்கும் ஒரு விளையாட்டுதான் இப்படத்தில் அதிகம் இருக்கும். இதற்கு நடுவில் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் வருவார்கள். நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மாநாடு உருவாகி இருக்கிறது’ என்றார். மாநாடு படத்தில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்...
பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா!

பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பை வெளியிட்ட நயன்தாரா! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கனெக்ட்’ என்று பெயர் வைத்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் நயன்தாராவே இப்படத்தை தயாரிக்கிறார். தற்போது கனெக்ட் படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்… என்னை நீங்க பார்த்துக்கோங்க… கண்கலங்கிய சிம்பு!

பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்… என்னை நீங்க பார்த்துக்கோங்க… கண்கலங்கிய சிம்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்... என்னை நீங்க பார்த்துக்கோங்க... கண்கலங்கிய சிம்பு! சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் சிம்பு பேசும்போது, ‘எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். படத்தை வெளியிட விடாமல் நிறைய பேர் தடுக்கிறார்கள். பிரச்சனைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களான நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கண்கலங்கி பேசி இருக்கிறார்....
ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி!

ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘பேச்சிலர்’ படம் தயாராகி வருகிறது. டில்லிபாபு தயாரித்துள்ள இப்படத்தை சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இளம் நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அன்றைய தினத்தில் நடன இயக்குனர் சாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் 3.33 (மூணு முப்பத்தி மூணு) திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாம்பூ ட்ரீஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கிறார். இ...