புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏ.ஆர்.ரகுமானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து! இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்ஸ்’ என்ற படத்துக்கு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார். விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் ரஜினிகாந்த், ‘99 சாங்ஸ்’ படத்தின் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதர...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கும் படம் விக்ரம். இப்படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை மகேஷ் பாபுவுக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவர் நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்ப...
ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்! பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழில் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் அறிமுகமான இவர், பின்னர் ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’ போன்ற ஆந்தாலஜி படங்களிலும் நடித்து பிரபலமானார். இந்நிலையில், இவர் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இப்படத்தை வினில் வர்கீஸ் இயக்குகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா பிரமோத் நடிக்கிறார். இப்படத்திற்கு மலையாளத்தில் ‘ரஜினி’ என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தமிழ் தலைப்பை வெளியிடவில்லை. இப்படத்தில் காளிதாஸ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளதால் படத்திற்கு ரஜினி என தலைப்பு வைத்துள்ளார்களாம். தமிழில் ஏற்கனவே ரஜினி என்ற பெயரில் ஒர...
ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்…. இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமும் உடன் நடிக்கிறார்!

ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்…. இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமும் உடன் நடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்.... இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமும் உடன் நடிக்கிறார்! குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதேபோல் பவித்ராவும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். புகழ் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அந்தவகையில், தற்போது அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஸ்வின் உடன் புகழும் இணைந்து நடிக்கிறார். படம் குறித்து இயக்குனர் ஹரி கூறியதாவது: “இது முற்றிலும் காதலை மையமாக கொண்ட காமெடி படம். கதைக்கு அஸ்வின் பொருத்தமாக இருந்ததால் தயாரிப்பாளர் அவர...
ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’… அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’… அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு! பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தை ‘பானா காத்தாடி’ புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ரியோ நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ரோபோ ஷங்கர், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வருகிற ஏப்ரல் 30-ந் தேதி ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ...
‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி!

‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி! திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மேலும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். அதன்படி, தமிழ்படம் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் புதிய படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாக உள்ளது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதா...
மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

மீண்டும் இணையும் மதயானை கூட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் மதயானை கூட்டம்! விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் கதிர், ஓவியா நடிப்பில் வெளியான படம் `மதயானை கூட்டம்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்குப் பிறகு விக்ரம் சுகுமாறன் `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், விக்ரம் சுகுமாறன் அடுத்ததாக மீண்டும் கதிரை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த புதிய படத்தை லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர் தயாரிக்க இருக்கிறார். விரைவில் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்....
ஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி!

ஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆர்யா படத்தில் நடித்த அரவிந்த் சாமி! தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். தற்போது அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’, ‘தலைவி’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படங்களை நடிகர் அரவிந்த் சாமி தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வந்தார். தற்போது இந்த படத்திற்கு தமிழில் ‘ரெண்டகம்’ என்றும் மலையாளத்தில் ‘ஒட்டு’ என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்த...
மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்!

மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகத் காதலுக்கு துணை நின்ற சிலம்பரசன்! ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். இந்நிலையில், மகத் நடிப்பில் உருவாகி வரும் ‘காதல் ConditionsApply’ என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார். லிப்ரா புரொடக்‌ஷன் ரவீந்தர் தயாரிக்கும் இந்த படத்தை அரவிந்த் இயக்குகிறார். தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு! அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு 1947 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இணை தயாரிப்பு ஓம் பிரகாஷ் பட். பொன் குமரன் இந்தப் படத்தை இயக்குகிறார். தற்போது படத்தின் முன்னணி பணிகள் தொடங்கியுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க...