புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

காடன் படத்தின் ஒளிப்பதிவாளரை பாராட்டிய  ராணா, விஷ்ணு விஷால்!

காடன் படத்தின் ஒளிப்பதிவாளரை பாராட்டிய ராணா, விஷ்ணு விஷால்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காடன் படத்தின் ஒளிப்பதிவாளரை பாராட்டிய ராணா, விஷ்ணு விஷால்! பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் காடன். இப்படத்தில் ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி இறுக்கிறார். முதல் படமே ஒருவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு அமைவது கடினம். ஆனால் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கு முதல் படமே நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த ஏ.ஆர்.அசோக்குமார், ஒளிப்பதிவு மீது உள்ள ஆர்வத்தால் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருடன் மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, தாண்டவம், சைவம், காவியத் தலைவன் ஆகிய படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார். மேலும், ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் தர்மதுரை, ஸ்கெட்ச், கும்கி 2 படங்களுக்கு உதவியாளராக ஏ.ஆர்.அசோக்குமார் பணியாற்றி இருக்கிறார். இப...
ஓடிடி தளத்தில் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்!

ஓடிடி தளத்தில் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஓடிடி தளத்தில் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்! 2020-ல் ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் ஜீ5 தளத்தில் வெளியானது. தற்போது மதில் என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படத்தில் மைம் கோபி, 'பிக்பாஸ்' மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கிய பிரச்சனை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. இப்படம் ஏப்ரல் 14 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது....
அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்!

அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்தில் வாக்கு சேகரித்தார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க, சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராயபுரத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், இயக்குனர் மோகனை சந்தித்து வாக்கு சேகரித்து மோகனையும் வாழ்த்தி சென்றார்....
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர்! பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ராம் சரணின் கதாபாத்திரம் குறித்த புதிய போஸ்டர் ஒன்றை ராஜமவுலி வெளியிட்டிருக்கிறார். இந்த போஸ்டரில் அல்லுரி சீதாராமராஜூ என்கிற கதாபாத்திரத்தில் ராம்சரண் தேஜா நடிப்பதாக ...
கார்த்தியின் சுல்தான் அப்டேட்!

கார்த்தியின் சுல்தான் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கார்த்தியின் சுல்தான் அப்டேட்! கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது....
எம்.ஜி.ஆர் மகன் அப்டேட்!

எம்.ஜி.ஆர் மகன் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எம்.ஜி.ஆர் மகன் அப்டேட்! கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பொன்ராம். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், இசையை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்!

சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சாய் பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்! மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்க உள்ளார். இதில் ராணாவு...
பிரபல நடிகர் இணைந்த விக்ரம் வேதா ரீமேக்!

பிரபல நடிகர் இணைந்த விக்ரம் வேதா ரீமேக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபல நடிகர் இணைந்த விக்ரம் வேதா ரீமேக்! மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பாலிவுட்டில் இப்படம் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய்சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக செய்திகள் வெளியானது. பின்னர் ஒரு சில காரணங்களால் அமீர்கான் இப்படத்தில் இருந்து வெளியேறினார். தற்போது இவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஹிருத்திக் ரோஷனின் 25வது படமான இந்த படத்தில் அவர் விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோடை விடுமுறையில் தொடங்க இருக்கிறார்கள்....
சைலன்டாக  ‘சுல்தான்’ பட வேலைகளை முடித்த யுவன்!

சைலன்டாக ‘சுல்தான்’ பட வேலைகளை முடித்த யுவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சைலன்டாக ‘சுல்தான்’ பட வேலைகளை முடித்த யுவன்! கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த டிரெய்லருக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ள நிலையில், டிரெய்லருக்கு மட்டும் யுவன் இசையமைத்திருந்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சமீபத்திய தகவல் படி சுல்தான் படத்திற்கும், யுவன் தான் பின்னணி இசை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்பத...
அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை பட டப்பிங் முடிந்தது!

அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை பட டப்பிங் முடிந்தது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை பட டப்பிங் முடிந்தது! அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க உள்ளனர். ஸ்பெயின் அரசின் அனுமதிக்காக படக்குழு காத்திருக்கின்றனர். அனுமதி கிடைக்க தாமதமாவதால், கடந்த சில நாட்களாக, வலிமை படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறதாம். அதேபோல் நடிகர் அஜித் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிற...