ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

MOVIES

‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’- ரூ.5 ஆயிரம் கோடி வசூல்

‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’- ரூ.5 ஆயிரம் கோடி வசூல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் படம் கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. கடந்த 5 நாட்களில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது. இந்தியாவில் முதல் நாளில் ரூ.40.13 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.39.1 கோடியும், 3-வது நாளில் ரூ.46.67 கோடியும் வசூலித்து இருந்தது. 5 நாட்களில் மொத்த வசூல் ரூ.150 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக வந்துள்ளது. இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆன்டனி ரஸோ, ஜோ ரஸோ ஆகியோர் டைரக்டு செய்துள்ளனர்....
விஷால் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட இரும்புத்திரை..!

விஷால் வில்லனாக நடிக்க ஆசைப்பட்ட இரும்புத்திரை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இரும்புத்திரை படத்தில் விஷால்-சமந்தாவுடன், சக்தி வாய்ந்த வில்லன் வேடத்தில் அர்ஜுன் நடித்து இருக்கிறார். அர்ஜுன் வில்லனாக நடித்தது எப்படி? என்பது பற்றி டைரக்டர் மித்ரன் கூறியதாவது:- ‘‘முதலில், இந்த படத்தை வேறு ஒரு கதாநாயகனை வைத்து எடுப்பது என்றும், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பது என்றும் முடிவு செய்திருந்தோம். விஷாலிடம் கதை சொன்னபோது, ‘‘அந்த வில்லன் வேடத்தில் நானே நடிக்கிறேன்’’ என்றார். அவ்வளவு கனமான வேடம், அது. நான்தான் விஷாலை வற்புறுத்தி கதாநாயகனாக நடிக்க வைத்தேன். சமந்தா கதாபாத்திரம் பற்றி இப்போது கூற முடியாது. ‘சஸ்பென்ஸ்’ ஆன கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். சமூக வலைதளங்களினால் ஏற்படும் பாதிப்பை பற்றி பேசும் படம், இது.’’...
மே 9 ஆம் தேதி காலா இசை..!

மே 9 ஆம் தேதி காலா இசை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினிகாந்த் நடித்தவுள்ள 'காலா 'படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9 ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இப்படத்தினை தனுஷ் தனது 'வுண்டர்பார் பிலிம்ஸ்' மூலம் தயாரித்துள்ளார். கபாலி மற்றும் மெட்ராஸ் பட புகழ் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது. வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ (DIVO) நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர். இசை வெளியீட்டு விழாவின் நேரலையை கீழ்கண்ட லிங்க்-களில் க...
இயக்குனர் T.ராஜேந்தர் வெளியிட்ட பூர்ணாவின் “ குந்தி “ பட டிரைலர்..!

இயக்குனர் T.ராஜேந்தர் வெளியிட்ட பூர்ணாவின் “ குந்தி “ பட டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
அன்னை  திரைக்களம் சார்பில்  மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF  TV   வழங்கும் படம் “ குந்தி “.  இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலரை இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் வெளியிட்டார்....
சுமார் 200 திரைகளில் ரிலீசாகும் அல்லு அர்ஜுன் படம்

சுமார் 200 திரைகளில் ரிலீசாகும் அல்லு அர்ஜுன் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவரது நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அல்லு அர்ஜுன் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துள்ள தெலுங்குப் படம் ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’. இதில் அல்லு அர்ஜுன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சரத்குமார், அர்ஜுன், நதியா, தாகூர் அனூப்சிங், ஹரீஷ் உத்தமன், கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். விஷால் - சேகர் இசையமைக்க, ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் ராணுவ வீரராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். என் பேரு சூர்யா என் வீடு இந்தியா என்ற தலைப்பில் தமிழில் வெளியாகும் இந்த படம்  ரிலீசாக இருக்கிறது. இதுவரை 207 காட்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவேலன் கூற...
“சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்தது பெருமை” -, கீர்த்தி சுரேஷ்

“சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்தது பெருமை” -, கீர்த்தி சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சாவித்திரியின் வாழ்க்கை, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:- “பெண் என்பவள் பலம் பொருந்தியவள் என்பதற்கும், நினைத்ததை சாதித்து காட்டுவாள் என்பதற்கும் உதாரணமாக வாழ்ந்தவர் நடிகை சாவித்திரி. அவரது கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா? என்று தயங்கினேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று பலரும் உற்சாகம் அளித்ததால் ஒப்புக்கொண்டேன். சாவித்திரி சம்பந்தமான புத்தகங்களை படித்தும், அவரது மகள் சாமுண்டீஸ்வரியிடம் விவரங்கள் சேகரித்தும் பல விஷயங்கள...
வாரிசுகளின் எதிர்காலம் குறித்து ‘தொட்ரா’ விழா மேடையில் கண்கலங்கிய ‘குரு-சிஷ்யன்’..!

வாரிசுகளின் எதிர்காலம் குறித்து ‘தொட்ரா’ விழா மேடையில் கண்கலங்கிய ‘குரு-சிஷ்யன்’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.  இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன்,  கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ்  ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தொட்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ், ​ மீரா கதிரவன், ​தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜே எஸ் கே, சுரேஷ் காமாட்சி, விடியல...
விஜய் இடத்தை பூர்த்தி செய்த விஜய் ஆண்டனி

விஜய் இடத்தை பூர்த்தி செய்த விஜய் ஆண்டனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய பயமில்லை என்று `டிராஃபிக் ராமசாமி' அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி'. இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை  இயக்கியிருக்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும் போது, " இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ, என் படங்கள் பற்றியோ, எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார். ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி, நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எ...
தமிழ் சினிமாவில் உருவாகும் புது புரூஸ்லீ…!

தமிழ் சினிமாவில் உருவாகும் புது புரூஸ்லீ…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
S.K.Aman Film Productions சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘புதிய புரூஸ்லீ’. இந்தப் படத்தில் புருஸ் சான் என்பவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். முளையூர் ஏ.சோணை இப்படத்தை இயக்கிருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது விழா விருந்தினர்கள் ஒவ்வொருவராய் மேடையேறும் போது, ஒரு இளைஞர் அச்சு அசலாக “புரூஸ் லீ” போலவே மேடையேற அரங்கமே ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தது. முதலில் பேசியது இயக்குநர் முளையூர் ஏ.சோனை தான். மனிதர் 18 வருட காத்திருப்பில் கிடைத்த மேடை என்பதால் கொஞ்சமல்ல, நிறையவே பேசினார். அவர் பேசியதாவது, “உலக சூப்பர் ஸ்டாரான ‘புரூஸ்லீ’யின் தீவிர ரசிகனான எனக்கு அவரைப் போன்ற தோற்றத்தில் நாயகன் ‘புரூஸ் சானை’ பார்த்ததுமே அந்தக் கேரக்டரை மனதில் ...
ஞானவேல் ராஜாவோடு கை கோர்த்த சிவகார்த்திகேயன்..!

ஞானவேல் ராஜாவோடு கை கோர்த்த சிவகார்த்திகேயன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு  எண்டர்டெயினர் படம்" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி. ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்‌ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது. இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் கேஈ ஞானவேல்ராஜா கூறும்போது, "ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில...