கீழடியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு பட பாடல்..!
ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு எங்கெல்லாம் நடந்துள்ளது, என திரைத்துறை செய்தியாளர்களை கேட்டால், நீண்ட பட்டியல் ஒன்றையே தருவார்கள். அதில் சில மேடைகள், நம் புருவத்தை உயர வைக்கும். அதைத் தாண்டி, - ஆச்சரியத்தில் முழ்க வைக்கும்... ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் முயற்சியில் பல புதிய களங்களை தனது திரைப்படத்துக்காக தேர்ந்தெடுத்துள்ளது அஹிம்சா புரொடக்ஷன்ஸ்.
ஆம்! தமிழ்.... தமிழர்... தாயகம்... போன்ற மண் சார்ந்த உணர்வுகள் முன்எப்போதும் இல்லாத உச்சத்துக்கு பயணிக்கும் நிலையில், இன்னொரு வரலாற்றுப் பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. சங்கம் வைத்து மொழி வளர்ந்த தமிழன், தனது கலையிலும், கலாச்சாரத்திலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, பல படிகள் முன்னேறியிருந்தான் என்பதை, இன்றைக்கு ஆதாரத்துடன் முன்வைக்கும்.... பண்பாட்டு பாசறையாக... வளர்ந்த நாகரீகத்தை காட்டும் நல்லதொரு சாட்சியாக விளங்கும் தொல்பொருள் ஆராய்ச்சி ...









